பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

297


சென்றான். அவன் வாயிலாக மாதவி கோவலனுக்கு மடல் கொடுத்தனுப்பினாள். எனவே, சிலம்பில் இடம்பெற்றுள்ள பார்ப்பனர்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர் எனச் சாடலாகாது.

ஆரியப் பார்ப்பனரும் தமிழ்ப் பார்ப்பனரும் பின்பற்றும் முறைகளுள் சில ஒத்திருக்கலாம். அவர்களைப் பார்த்து இவர்களோ - அல்லது - இவர்களைப் பார்த்து அவர்களோ சிலமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம். இரு சாராரும் மறையவர் என்னும் உயரிய பெயருக்கு உரியராவர். சிலம்பில் இடம் பெற்றிருப்பவருள் ஒவ்வொருவராக இனிக் காணலாம்.

1. தேவந்தி

தேவந்தியைப் பற்றி வேறு தலைப்புகளில் சில சிறு குறிப்புகள் இருப்பினும், இங்கே ஒரு சிறிது விரிவாகக் காண்பாம். தேவந்தி கண்ணகியின் பார்ப்பனத்தோழி.

மாலதி என்னும் பார்ப்பனி தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் புகட்டுகையில் பால் விக்கிக் குழந்தை இறந்துவிட்டது. குழந்தையை உயிர்ப்பித்துக் தரும்படி மாலதி பாசண்டச் சாத்தன் கோயிலில் பாடு கிடந்தாள். இந்த நேரத்தில் இடாகினி என்னும் பேய் குழந்தைப் பிணத்தை விழுங்கி விட்டது. மாலதியின் துயர் நீக்கப் பாசண்டச்சாத்தன் அக் குழந்தை வடிவாக வந்து கிடந்தான். மாலதி குழந்தையை மாற்றாளிடம் ஒப்படைத்தாள். குழந்தை பெரியவனானான்; தேவந்தியை மணந்து கொண்டான். எட்டு ஆண்டுகள் அவளோடு வாழ்ந்து மறைந்து விட்டான். கைம்பெண்ணான தேவந்தி பாசண்டச் சாத்தன் கோயிலைச் சுற்றிக்கொண்டு கிடந்தாள். இது தேவந்தியின் வரலாறு.

பாசண்டச் சாத்தனாகிய கணவனும் தேவந்தியும் உடல் உறவு கொள்ளவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்