பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

சுந்தர சண்முகனார்


பொறுப்பேற்று, அப்பழியைத் துடைப்பதற்காக வடபுலம் போந்து கங்கையில் நீராடி அமைதி பெற்றான்.

மாடலன் கங்கையில் நீராடியபின், அங்கே, வடவரை வென்று, கங்கையின் தென்கரையில் பாசறையில் தங்கியிருந்த சேரன் செங்குட்டுவனைக் கண்டு வாழ்த்திப் பின் மதுரையில் நிகழ்ந்தனவற்றையும் மற்றும் சில செய்திகளையும் கூறலானான்:

மாதவியின் கானல்வரிப் பாட்டு கன கவிசயரின் முடித்தலையை நெரித்தது. கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் மதுரை போந்து கொலைக் குற்றம் சாற்றப்பட்டு உயிர் துறந்தான். கண்ணகி உமது சேரநாட்டு எல்லையில் வந்து உயிர் நீத்தாள். இச்செய்தியறிந்ததும் கண்ணகிக்கு அடைக்கலம் ஈந்த மாதரி தீக்குளித்து இறந்தாள். இச்செய்தியை யான் புகார் அடைந்து சொன்னேன். கேட்ட மாசாத்துவான் புத்தத் துறவியானான்: மாநாய்கன் ஆசீவகர் பள்ளியடைந்து துறவு மேற்கொண்டான். கோவலன் - கண்ணகி ஆகியோரின் தாய்மார்கள் உள்ளம் உடைந்து உயிர் துறந்தனர். மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டனர். பாண்டிய நாட்டில் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தனர். நெடுஞ்செழியனின் இளவல் வெற்றிவேல் செழியன் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலி கொடுத்து மதுரையை ஆள்கிறான். புகார் நகரில் சோழ மன்னன் நலமாயுள்ளான் - என்றெல்லாம் மாடலன் தெரிவித்தான்.

மாடலன் கூறியவற்றைக் கேட்டதும், செங்குட்டுவன் தன் உடம்பின் நிறையாகிய ஐம்பது தூலாம் பொன்னை மாடலனுக்குத் தானமாக அளித்தான்.

தனது வடபுல வெற்றியைப் பாண்டியனும் சோழனும் தாழ்த்திப் பேசியதாக அறிந்த செங்குட்டுவன் வெகுண்டு