பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

329


எல்லாச் சாதியினரையும் இழிவுபடுத்தும் சொற்றொடர்களும் பழமொழிகளும் கதைகளும் உலகியலில் உண்டு. நான் கைக்கோளர் இனத்தைச் சேர்ந்தவன். எங்கள் இனத்தைக் குறைவு படுத்தும் சொற்கள் உண்டு எங்கள் இனத்தவருள் சிலர் நெசவு நூல் திருடுவதுபோல், பொற்கொல்லர்கள் சிலர் பொன் திருடுகின்றனர். வேறு தொழிலாளர் சிலரும் தம்மால் இயன்றவரையும் ஒரு கை பார்க்கிறார்கள்.

எனவே, எல்லாத் தொழிலாளரும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் இந்தத் தலைப்பை நிறைவு செய்யலாம்.