பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

331


என்பது பாடல் பகுதி. ஆனால், இளங்கோவின் நம்பிக்கைக்கு மாறாகப் புகார் கடல் கொள்ளப்பட்டு விட்டது. புகார் நகரம் இருந்த நிலப் பகுதி, தன் இருபக்கமும் உள்ள நிலப் பகுதியைவிடக் கடலுக்குள் ஒரளவு துருத்திக் கொண்டிருந்திருக்கும்; அதனால் புயல் அடிக்கக் கடலில் கொந்தளிப்பு ஏற்பட அலை மலைபோல் மேலெழுந்து புகாரை விழுங்கி விட்டிருக்க வேண்டும். 1952 ஆம் ஆண்டு தனுஷ்கோடியைக் கடல் ஏப்பம் விட்டதைப் போன்றதுதான் புகாரின் நிலையும்.

"பொதியி லாயினும் இமய மாயினும்
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்"

என்று மட்டும் இளங்கோ பாடியிருந்தால் நல்லது. ஆனால், புகார் நகரம், பதியெழு வறியாப் பழங்குடி நிலவியது என்று பாடியிருப்பதுதான் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

புகாரில் இருந்த பழங்குடி மக்கள் வேறிடத்திற்குக் குடிபெயர்ந்துள்ளதாகக் கருத இடமுண்டு. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் உள்ளனர். இவர்கள் உள்ள பகுதியைச் செட்டிநாடு என்று அழைப்பர் சிலர். இங்கே உள்ள செட்டிமார்கள் சிலரின் வீடுகள் உயரமான அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

1962 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களுடன் மற்றொரு செட்டியார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரும் எனக்கு நண்பராகி விட்டார். பெயர் நினைவில்லை. நான் அவரை நோக்கி, உங்கள் ஊர்ப் பக்கங்களில் வீட்டின் கீழ்த்தளமே - அதாவது முதல் தளமே உயரமான அடித்தளத்தின் மேல் கட்டப்