பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

சுந்தர சண்முகனார்


போது, துணிக் கொடிகளாகிய கைகளை நீட்டி விரைவில் வருக என அழைப்பதுபோல் கொடிகளின் அசைவு இருந்ததாம். பாடல்:

"மையறு மலரின் நீங்கி யான்செய் மாதவத்தின்வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள்
என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்ற

தம்மா" (1)

என்பது பாடல். ஒல்லை வா என்பதற்கு விரைவில் வருக என்பது பொருள். கொடிகள் மிகவும் படபடப்புடன் காற்றில் அசைந்தாடுவது ஒல்லை வா என அழைப்பது போலத் தெரிகிறதாம்.

கண்ணகியைக் கவுந்தியுடன் தங்க வைத்து மதுரை மூதூரைச் சுற்றிப் பார்க்கச் சென்ற கோவலன் மதுரையில் கண்டவை: நறுமணப் பொருள்கள் விற்கும் தெரு, பொது மகளிர் தெரு, பல்பொருள் அங்காடித் தெரு, ஒன்பான் மணிகள்விற்கும் தெரு, துணிக்கடைத் தெரு, கூலக் கடைத்தெரு, பல்வேறு குலத்தினர்களின் தெருக்கள், முச்சந்தி, நாற்சந்தி, கோயில், அங்காடி, பலிமன்றம், கவர்க்கும்வழிகள், கொடியாலும் பதாகையாலும் வெயில் தெரியாமல் பந்தல் போட்டது போன்ற தெருக்கள் முதலியவற்றைக் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டான்.

மதுரையில் சிவன், திருமால், பலதேவன், முருகன் ஆகியோர் கோயில்கள், அறவோர் இருப்பிடங்கள், மன்னவன் கோயில் ஆகிய இடங்களில் காலையில் முழவு, சங்கு, கொம்பு முதலியவை முழங்கும்.

அங்காடித் தெருவில், வண்டி வகைகள், அங்குசம், சாமரம், தோற்கடகம், கவசம், குத்துக்கோல், செம்பாலும்