பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

சுந்தர சண்முகனார்



அவர் கண்கள் அவருக்கு முதலில் நினைவுறுத்தின - அவர் பொருட் படுத்தவில்லை. அவளைப் பார்க்க வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கெஞ்சின - அவர் புறக்கணித்துவிட்டார். பின்னர், பார்க்கத்தான் வேண்டும் என அடம்பிடித்துப் பார்த்தே விட்டன"

இந்த உரைநடை இலக்கியத்திலும் இந்தக் கற்பனை உள்ளதைக் காணலாம்.

மாங்காட்டு மறையவன் திருவரங்கத்தையும் திருவேங்கடத்தையும் கண்ணுக்குக் காட்டச் செலவு மேற்கொண்டான். இது தொடர்பான சேக்சுபியரின் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது, கையை, ஏழையாக்கிக் கண்ணைப் பணக்கார ணாக்கு என்று ஓரிடத்தில் அவர் கூறியுள்ளார். கையை ஏழையாக்குதல் என்றால், கைப் பணத்தைச் செலவிடு என்று பொருளாம். கண்ணைப் பணக்காரனாக்கு என்றால், பல காட்சிகளையும் கண்ணால் கண்டு மகிழ்ச்சியுடன் பொது அறிவு பெறுக என்று பொருளாம். ஊர் சுற்றி உலக அறிவு பெறுக என்பதை மாங்காட்டு மறையவன் வாயிலாக இளங்கோ குறிப்பாகக் கூறியுள்ளார்.

உலகுதொழு மண்டிலம்

தாமரையை மலரச் செய்யும் ஞாயிறு தோன்றிச் செழியனது மதுரையைத் துயில் எழுப்பியதாம்.

"மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்

ஓங்குயர் கூடல் ஊர்துயில் எழுப்ப" (14:46)

ஞாயிறை உலகம் தொழுவதாலும் அதைச் சுற்றிப் பல கோள்கள் இருப்பதாலும் அது உலகுதொழுமண்டிலம் எனப்பட்டது. நீர்ப்படைக் காதையில்,

"காலைச் செங்கதிர்க் கடவுள்" (27:137)