பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

371


என ஞாயிறு கடவுளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிறு வணக்கம் உலகில் பல்வேறிடங்களிலும் செய்யப்படுகிறது. இளங்கோவே ‘ஞாயிறு போற்றுதும்’ என்று கூறியுள்ளார். ஞாயிறுக்குக் கோயிலும் உண்டு. சூரியநாயனார் கோயில் என்னும் பெயரில் ஓர் ஊரும் உள்ளது. எகிப்திலும் கோயில் உண்டு. திருமுருகாற்றுப்படையை, நக்கீரர்,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு” (1,2)

என ஞாயிறு போற்றித் தொடங்கியுள்ளார். ‘அதோ எரிந்து கொண்டு போகிறானே சூரிய நாராயணன் - அவன் கேட்பான்’ என மக்கள் நீதி பெற ஞாயிறைத் துணைக்கு அழைக்கின்றனர். நம் மண்ணுலகைப் பெற்ற தாயும் ஆகும் ஞாயிறு.

வழக்குரை காதை

சொல்லின் செல்வி

அனுமன் இராம இலக்குமணரிடம் தன்னைப் பற்றிச் சுருக்க விளக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்ட சொல் வன்மையால் சொல்லின் செல்வன் எனப்பட்டான். ‘யாரையோ நீ மடக் கொடியோய்’ எனப் பாண்டியன் வினவியலும் கண்ணகி சொல்லின் செல்வியாய் மாறி விடுகிறாள்.

புறாவின் துயர் போக்கிய சோழன் சிபியும், ஆவின் கண்ணீர் தன் நெஞ்சைச் சுட்டதால் தன் பெறலரு மகனைத் தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட புகார் எனது ஊர். அவ்வூரின் பெருங்குடி மகனாகிய மாசாத்துவானின் மகனும் நின் மதுரைக்கு வந்து என் கால் சிலம்பை விற்க முயன்றபோது நின்னால் கொல்லப்பட்டவனும் ஆகிய கோவலனின் மனைவி நான்.எனது பெயர் கண்ணகி - என்று சுருக்கமாகத் தன் வரலாற்றைக்