பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

சுந்தர சண்முகனார்


கூறிய கண்ணகியைச் சொல்லின் செல்வி என்று குறிப்பிடலாம் அல்லவா?

வஞ்சின மாலைக் காதையில், கண்ணகி, கற்புடைய மங்கையர் எழுவரின் கற்பு வரலாற்றைக் கூறி, அவர்கள் பிறந்த புகாரிலே பிறந்தவள் யான் எனக் கூறியுள்ள பகுதி படித்துச் சுவைத்தற்குரியது.

காட்சிக் காதை

எமனது வியப்பு

சேரன் செங்குட்டுவன் ஆரிய மன்னர்கள் ஐந்நூற்று வரைத் தான் ஒருவனே எதிர்த்துச் செய்த போரை, எமன் வியந்து தன் கடுமையான கண்களை மூடாமல் விழித்த படியே பார்த்துக்கொண்டிருந்தானாம்:

“கண் விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்” (25:64)

இது ஓர் இலக்கியச் சுவை. பாண்டியன் மனைவி கோப் பெருந்தேவி, கணவன் பாண்டியன் உயிர் துறந்ததும், தனது உயிரால் அவனது உயிரைத் தேடுவதற்காக உயிர் விட்டவள் போல் உடனே இறந்து விட்டாளாம்:

“தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள்போல்
பெருங் கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தாள்”

(25:85)

இஃதும் ஓர் இலக்கியச் சுவை . தற்குறிப்பேற்ற அணி அமைந்தது.

அரசியல் சூழ்ச்சி

வட நாட்டுக்குப் படையெடுக்கப் போவதாக முன்கூட்டி வடபுல அரசர்கட்குத் தூது விடும்படி வில்லவன் கோதை செங்குட்டுவனுக்குக் கூறினான். ஆனால், அழும்பில்வேள் என்பவன், தூது அனுப்ப வேண்டிய தில்லை - உலக