பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

395


எனது முடிவை மறுத்து, காளியே கண்ணகியாக வந்தாள் என்று வலியுறுத்திக் கூறினார். யான் விடவில்லை. என் கருத்தையே யான் மீண்டும் எழுந்து வலியுறுத்தினேன். அவரும் விடவில்லை - பிறகு நானும் விடவில்லை. கூட்டம் ஒருவாறு முடிந்தது. ஆனால் திருச்சியில் மறுப்பு இல்லை.

யான் இளமையில் கோவலனைப் பற்றிப் பார்த்தறிந்த - கேட்டறிந்த காட்சிச் செய்தியாவது:- மாதவி கோவலன் கழுத்தில் மாலையை மாட்டி விட்டாள். அதை அவனால் கழற்ற முடியவில்லை - இது தொடர்பாகப் பாடப்பட்ட பாடலின் ஓரடி நினைவிற்கு வருகிறது:


“கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை -

காரிகையே இது யார் சூதோ?”

என்பது. இதனை, விளையாட்டாக, பெரியவர்கள் போல் சிறுவர்களும், .

“கலுத்தில் விலுந்த மாலா கலட்ட முடியவில்லா

காரிகையே இது யார் சூதா”

எனப் பாடுவதுண்டு. இதை யானும் பாடியிருக்கிறேன். கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்தபோது கூறியதாகச் சொல்லப்படுகிற-

“பழிக்குப் பழி கொடடா பழிகாரப் பாண்டியனே”

என்பதையும் சிறுவயதினராகிய நாங்கள் பாடிய துண்டு. நிமித்தம் என்னும் தலைப்பிலும் இது பற்றிய பாடல் அடிகள் சில இடம் பெற்றுள்ளன.

பழங்கதையின் சுருக்கம்

மேலே கூறியிருப்பது பழங்கதையின் தொடாபுளளதே. முழுச் சுருக்கத்தையும் மேலும் சுருக்கமாகக் காண்பாம்: பாண்டிய மன்னன் ஒருவன் பிள்ளையில்லாமையால், தன் மனைவி வயிற்றில் பிள்ளை உண்டாக. அருள் புரியும்படிக்-