பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

சுந்தர சண்முகனார்



செல்சுடர் அமையம்

மாதரி அடைக்கலமாய் அழைத்துச் சென்றது பகல் 22½ நாழிகை (பிற்பகல் 3 மணி) - என வீரபத்திரன் எழுதியுள்ளார். ஆனால், ஞாயிறு மறைந்து கொண்டிருக்கும் மாலையில் அழைத்துச் சென்றதாக இளங்கோ கூறியுள்ளார். பாடல் பகுதி வருமாறு: (அடைக்கலக் காதை)

“முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப... (215:202-204)
வாயில் கழிந்துதன் மனை புக்கனளால்” (218)

என்பது பாடல் பகுதி. முதுக்குறை நங்கை = கண்ணகி. சென்ற ஞாயிறு, செல்சுடர் அமையம், கன்றுதேர்ஆ - என்பன ஞாயிறு மறையும் மாலையைக் குறிக்கின்றன அல்லவா? இது பிற்பகல் 3 மணி ஆகாதன்றோ? வீரபத்திரன் ஒரு குத்துமதிப்பாக நாள்குறிப்பு எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

ஆக, கோவலன் கொலையுண்டது முதல் நாள் மாலை என்றும், அவனது உடலைக் கண்ணகி கண்டது மறுநாள் மாலை என்றும் வீரபத்திரன் கூறியுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணங்களும் அவற்றிற்கு என் மறுப்புகளும் தடை விடைகளாக வருமாறு:

தடை விடைகள்

காரணம்: கோவலன் சிலம்பு விற்கப் புறப்பட்டபோது காளை மாடு தீநிமித்தமாய்க் குறுக்கிட்டது. மாடுகள் மாலையில்தான் மந்தையிலிருந்து வீடு திரும்பும். எனவே, கோவலன் முதல் நாள் மாலையே புறப்பட்டான்.

மறுப்பு: காலையில் மாடுகள் மந்தைக்குப் புறப்பட்டிருக்கலாமே. மற்றும், மாதரி வீடு ‘பல்லான் கோவலர்