பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

411


என்னும் குறளில் நெருதல் (நேற்று) - இன்று என்னும் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை இங்கே எண்ணிப் பார்க்கவேண்டும்.

குறைப் பட்டியல்

முதல் நாள் மாலை உணவு கொண்டபின் கண்ணகியிடம் தன் பழைய குறைபாடுகட்குப் பட்டியல் போட்டுக் காட்டும் கோவலன்,

“இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன்” (16:67)

என்பதைப் பட்டியலில் புகுத்தியுள்ளான். அதாவது, புகாரில் இருந்தபோது, தன் பெற்றோர்கள் தன் குறைபாடுகளைக் கண்டித்து எவ்வளவோ அறிவுரை கூறியும் தான் பொருட்படுத்தித் திருந்தவில்லை என்பது கருத்து. ஆனால், இருமுது குரவரும் கோவலனைக் கண்டித்துத் திருத்தியதாக இளங்கோவடிகள் முன்னர்க் கூறவில்லை. இங்கே கூறியிருப்பதைக் கொண்டு, முன்பு பெற்றோர்கள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்கள் என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். அதேபோல், காலைவாய்ப் போனவன் மாலை வாய்ப் பிணமானான் என்பதைக் கொண்டு, கொலை முதல் நாள் மாலை நடக்கவில்லை - மறுநாள் மதியம் அளவில் நடந்திருக்கலாம் என நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

காப்பியச் சுவை

முதல் நாள் மாலை உணவுண்ட பின், கண்ணகியும் கோவலனும் துயரத்தைப் பரிமாறிக் கொண்டதையடுத்துக் கோவலன் சிலம்பு விற்கச் சென்று கொலை யுண்டான் எனத் தொடர்ச்சியாக இளங்கோவின் எழுதுகோல் எழுதியது ஏன்? “சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன்” என்று சொல்லிப் போனவன் பின்னர் வரவேயில்லையே - என்ற அழுகைச் (அவலச்)