பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

415



கரை நீரும் கானலும்

இங்கே யான் இளமையில் பார்த்த ஒரு திரைப்படப் பாடல் பகுதி நினைவுக்கு வருகிறது. பி. யு. சின்னப்பா என்பவர் கோவலனாக நடித்த திரைப்படப் பாடல்தான் அது. அந்தப் படத்தில், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்று கொண்டிருக்கும் கோவலன், ஒரு பாடல் பாடிக் கொண்டே செல்கிறான். அதில் ஒர் அடி நினைவில் உள்ளது. அது,

“கரை அடுத்த நீர் இருக்கக்
கானலை நாடிடும் மான்போல்”

என்ற அடியாகும். கரை அடுத்த நீர் கண்ணகி. கானல் மாதவி. இதே நிலைதான், சிலப்பதிகாரக் கோவலனது நிலையுமாகும். கோவலன் தன்னைவிட்டுச் சென்றதும், மாதவி வயந்தமாலை வாயிலாகக் கோவலனுக்கு வருமாறு எழுதி மடல் அனுப்பினாள். கோவலன் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு மதுரைக்குச் சென்ற வழியில், தெய்வப் பெண் வயந்தமாலை வடிவில் வந்து மயக்கியும் கோவலன் ஏமாறவில்லை. மாதவி கெளசிகன் வாயிலாக மடல் எழுதி அனுப்பியும் கோவலன் ஏமாந்து திரும்பவில்லை. எனவே, மாதவி மயக்கி விடுவாள் - நாம் ஏமாந்து விடுவோம் - என்ற ஐயத்துடன் - அச்சத்துடன் மதுரைக்குப் புறப்படவில்லை. உறுதியான உள்ளத்துடனேயே கண்ணகியிடம் சென்றான். அவள் “சிலம்பு உள கொள்மின்” என்று கூறினாள். மற்ற அணிகலன்களை எல்லாம் முன்னமேயே கொடுத்துவிட்டாள் என்பது இதனால் புரிகிறது. ஆனால் கோவலன் சிலம்பைப் பெற்றுக் கொண்டு முன்போல் மாதவியிடம் செல்லவில்லை. பொருள் தொலைந்ததால் பெற்றோர் முகத்தில், விழிக்கக் கூசினான் - ஊராரின் ஏளனத்துக்கு ஆளாகவேண்டும் எனவும் எண்ணினான். எனவே, மதுரை சென்றுபொருளீட்டி வரவேண்டும் என எண்ணினான், அதன்படி, எவரும்