பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

சுந்தர சண்முகனார்


மற்றும், புராணக் கதைகளைப் போன்ற எத்தனையோ காப்பியக் கற்பனைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கலாமே. தெய்வம் தொடர்பான இதை நம்ப வேண்டுமே! எனவே, வயந்த மாலையை உள்ளத்தில் கொண்டே கோவலன் கானல் வரி பாடினான் எனக் கூறல் பொருந்தாது. அங்ஙன மெனில் இதற்குத் தீர்வு யாது? காண்போம்:

உரிய தீர்வு

வயந்த மாலை மாதவியின் தோழி எனப்படுகின்றாள். ‘மணி மேகலை’ காப்பியத்தில் கூட, மாதவியின் தாயாகிய சித்திராபதி வயந்தமாலையை மாதவியிடம் அனுப்பியதாகச் சாத்தனார் பாடியுள்ளார். பணிப்பெண் நிலையிலும் வயந்த மாலை இருந்திருக்கிறாள். மாதவி வயந்த மாலை வாயிலாகக் கோவலனுக்கு மடல் அனுப்பிய செய்தி அறிந்ததே. எனவே, கோவலன் வயந்த மாலையுடன் தொடர்பு கொள்வது மாதவிக்குப் பிடிக்கவில்லையெனில், வயந்த மாலையை அப்புறப் படுத்தி விடலாமே - அதாவது துரத்தி விட்டிருக்கலாமே. சோழன் கங்கையையும் கன்னியையும் புணரினும் காவேரி புலவாததுபோல், நான் வயந்த மாலையைப் புணரினும் மாதவியே நீ புலவாதே என்று குறிப்புப் பொருள் அமைத்துக் கோவலன் கானல் வரி பாடும் அளவிற்கு இடம் கொடுத்திருக்க வேண்டியதில்லையே. வயந்த மாலையை விரட்டுவது கோடரி கொண்டு பிளக்க வேண்டிய அளவுக்குக் கடினமானதன்றே - நகத்தால் கிள்ளியெறியக் கூடிய எளிய செயலே. ஆதலின் கானல் வரிப் பாடலில் வயந்த மாலைக்குச் சிறிதும் இடமே இல்லை என்பது புலனாகலாம்.

ஆடவரின் ஓரியல்பு

அங்ங மெனில், யாரை அகத்தில் எண்ணிக் கோவலன் பாடியிருக்கலாம்? யாரையும் எண்ணிக்கோவலன் பாட