பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

47


வெற்றி முதலியன பொருள் ஆகும். கண்ணகியும் கோவலனும் இன்புற்றது, மாதவியும் கோவலனும் களிப்பாட்டயர்ந்தது. ஊர் மக்கள் இன்பமாகப் பொழுது கழித்தது முதலியன இன்பமாகும். கண்ணகியும் கோவலனும் மேலு லகு செல்லுதல், சேரன் வேள்வி இயற்றுதல், கண்ணகிக் கோட்ட வழிபாடு முதலியன வீட்டின்பாற் படும்.

நிகரில் தலைவன் - தலைவி:- பெருங்குடியில் பிறந்த கோவலனும் கண்ணகியும் நிகரில்லாத காப்பியத் தலைவர்களாவர்.

மலை, கடல், நாடு, நகர் புனைவுகள்: இமயத்தில் கல் எடுத்தல், குன்றக் குரவை முதலியவை மலைப் பகுதியாம்.

புகார் மக்கள் கடலில் குளித்த கடலாடு காதை கடல் பற்றியது. சோழ நாட்டுப் புனைவும் பாண்டிய நாட்டுப் புனைவும், மதுரைப் புனைவும், சேரர் புனைவும் நாடு - நகரப் புனைவுகளாம் (வருணனைகளாம்).

பருவம்: வேனில் வந்தது - வேனில் காதை - பெரும் பொழுது. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை - சிறு பொழுது.

இரு சுடர்த் தோற்றம். திங்கள்: மாலையாகிய குறும்பை ஒட்டித் திங்கள் மீனர சாளுதல். ஞாயிறு: ஊர் காண் காதையில் பறவைகள் ஒலிக்கத் தாமரை மலர ஞாயிறு தோன்றுதல் - மதுரையைத் துயில் எழுப்பல். இந்திர விழவூர் எடுத்த காதையில் - நிலமகளின் இருளாகிய போர்வையைக் கதிராகிய கையால் நீக்கி ஞாயிறு தோன்றும் மலையில் (உதய கிரியில்) தோன்றிமை முதலியன.

மற்றும், வேங்கடத்தில் மாலையில், கிழக்குப் பக்கம் திங்களும், மேற்குப் பக்கம் ஞாயிறும் தோற்றமளித்தல்.