பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

49


கணவன் வந்தபோது சிரித்தபடி அவனை வரவேற்றாள். சாலினி தன்னைப் பாராட்டியபோது கண்ணகி கூச்சப்பட்டுப் புன்னகை புரிந்தாள். மற்றும், கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டு ஒரு காவதத் தொலைவு கடந்ததுமே, கால் நோகப் பெருமூச்செறிந்து, கோவலனை நோக்கி, மதுரை மூதூர் எது - இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று மெல்லப் பல் தெரியச் சிரித்தபடிக் கேட்டாளாம் கண்ணகி. அண்மையில்தான் மதுரை உள்ளது என்று கோவலன் கூறிச் சிரித்தானாம். எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கின் காரணமாக நகை தோன்றும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேற்கூறிய நகைகளைக் கண்ணகியின் பேதைமை காரணமாக வெளிப்பட்டவை என்று கூறலாம்.

சேரன் செங்குட்டுவனுக்கு அஞ்சி, வடபுல மன்னர்கள் சிலர் பல்வேறு மாறு கோலம் கொண்டு தப்பித்து ஓடிய செய்தி வேறு தலைப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மிக்க நகைச்சுவை தருவதாகும். இது எள்ளல் காரணமாக எழுந்தது எனலாம்.

அழுகை: கண்ணகி மாலதி முதலியோரின் அழுகை.

இளிவரல் (இழிவு): கோவலனையும் கண்ணகியையும் எள்ளி நகையாடிய பரத்தனும் பரத்தையும் நரிகளாக்கப்பட்டு வருந்தியது.

மருட்கை (வியப்பு): சாரணர் வான்வழி வருதல், கவுந்தி பரத்தையர்களை நரியாகச் சபித்தல், கண்ணகி இடப்பக்க முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்தல், முன் பிறவியும், மறு பிறவியும் அறிதல் - முதலியன.

அச்சம்: யானை கிழ அந்தணனைத் துதிக்கையால் பற்றினபோது தோன்றிய அச்சம். மாதரி முதலியோர்