பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

57


சாரணர் ஒருவர் கவுந்தியடிகளிடம் பின்வருமாறு கூறினார். உருத்து வந்த ஊழ்வினை ஒழிக. என எவர் முயலினும் ஒழியாது. விதைத்த விதை முளைத்து முதிர்ந்து பயன் அளிப்பது போல், ஊழ்வினை பயன் அளித்தே தீரும்.

“கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்லிணை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்துஎய்தி

ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா” (170.173)

என்பது பாடல் பகுதி. நல்லூழுக்கு உரியவையல்லாத பொருள்களை வருந்திக் காத்தாலும் வளராவாம்; ஊழின் படி தமக்கு உரிய பொருள்களை வெளியில் கொண்டுபோய்க் கொட்டினும் போகாவாம் - என்னும் கருத்து செறிந்த

“பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச்

சொரியினும் போகா தம” (376)

என்னும் குறளும், மழை பெய்யாது வறண்டபோது பெய் என்றால் பெய்யாது - மழை நிரம்பப் பெய்யுங்கால் நிறுத்து என்றால் நிறுத்தாது - அதுபோல், ஊழ்வினையும் தீவினை செய்யுங்கால் அதை நீக்கவும் முடியாது - நல்லது செய்யின் அதனை விலக்கவும் முடியாது என்னும் கருத்து அமைந்த

“உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை; அதனைச்

சிறப்பின் தணிப்பாரும் இல்” (104)

என்னும் நாலடியார்ப் பாடலும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.

ஊர் காண் காதை

கவுந்தி கோவலனுக்குக் கூறுகிறார்: பெரியோரின் அறிவுரைகளை அறிவற்றவர்கள் ஏற்று ஒழுகாமல், தீவினை