பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

67


தாகும். தீக் கனா என்பது, பாண்டியனும் அவன் தேவியும் ஊரும் அழிய இருப்பதாகும். இதைச் சொல்லக் கண்ணகிக்கு உள்ளம் ஒருப்படவில்லை.

“நற்றிறம் கேட்கின் நகையாகும்” என்பதில் உள்ள கருத்து, இறுதியில் கோவலனும் கண்ணகியும் தேவர்களால் வரவேற்கப்பெற்று மேலுலகம் செல்லுதலாகும். இது கிடைத்தற்கு அரிய பேறு ஆதலின், தங்கட்கு இது கிடைத்ததாகக் கூறின், ஓகோ, இவர்கட்கு இவ்வளவு பேரவாவா என்று சிலர் எள்ளி நகையாடக் கூடும் - என்று கண்ணகி எண்ணினாள் - என்பது கருத்து.

கோவலன் கொல்லப்பட்ட பின்பு, மா துயர் எய்திய கண்ணகி, முன்பு தான் கண்ட இந்தக் கனவை நினைத்துப் பார்த்தாளாம் அதாவது, அந்தக் கனவின்படி: நடந்துள்ளதாக எண்ணினாளாம். பாடல்: -

“தீவேந்தன் தனைக்கண்டு இத்திறம் கேட்பல்
                                                            யான் என்றாள்
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங் கயற்கண் நீர் சோர

நின்றாள் நினைந்தாள்” (ஊர்சூழ் வரி. 71-74)

என்பது பாடல் பகுதி.

இந்தக் கனாவைக் கண்ணகி உண்மையில் கண்டிருப்பாளா? கண்ணகி இக்கனர் கண்டதாகக் காப்பியச் சுவைக்காக - ஒரு முன்னோட்டமாக ஆசிரியர் இளங்கோ அடிகள் எழுதியுள்ள கற்பனையா இது? இரண்டாவது உண்மையாயிருக்கலாம். சொல்லி வைத்தாற்போல் இவ்வளவையும் தவறாமல் முன்கூட்டிக் கனவில் காண இயலுமா என்ன?

அடுத்து இரண்டாவது கனா நிகழ்ச்சியைக் காண்பாம்: