பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 என்ன சொன்னார்கள்? எங்களுக்குத் தெரியாதது இவருக்குத் தெரியுமா ?" என்று உறுமினார்கள். சரி. ஆண்டவன் இவர்களிடம்தான் அடக்கமா ? ஏசு என்ன செய்தார் ? தொடர்ந்து நல்லது செய்தார்? யாருக்குச் செய்தார் ? தேவைப்பட்டவர்களுக் கெல்லாம். அப்படியா? இதிலாவது கோபம் தணிந்ததா? தந்நலக்காரர்களுக்குப் பொது நலம் தெரி யுமா? கிடக்கட்டும். உயிரைப் போக்க அவ் வளவு கோபம் ஏன் ? தாழ்த்தப்பட்ட மக்களோடு உறவு கொண் டார். அட சனியனே ! அங்கும் இந்நோய் உண்டா? ஆம். மக்களில் சிலர் உயர்ந்தவர்களாம். சிலர் தாழ்ந்தவர்களாம். ஏசு அப்படி நினைத்தாரா ? இல்லை. 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்பவர் களோடு உண்டார். அப்புறம்? அவர்களைத் தொட்டார். அவர்களில் ஒருவரை அடியவராக ஏற்றுக் கொண்டார். கோபம் கொழுந்து விட்டிருக்கும் ! ஆம். குமுறல் அதிகமாயிற்று.