பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யைத் தாங்கள் சந்தித்துப் பேசினீர்களா? நேரு தங்களிடம் அப்போது ஏதாவது சொன்னரா?' என்று என் முதல் கேள்வியைத் தொடங்கினேன்.

"புவனேசுவருக்கு நேருஜி வந்திருந்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது ;சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகே அவர் உடல் நிலையில் தளர்ச்சி கண்டிருந்தது. நேருஜி புவனேசுவருக்கு வந்திருந்த போதிலும் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நேருஜி வராமல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு அதுதான். மாநாட்டுப் பந்தலில் அவருக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் காலியாக இருந்ததால் மாநாட்டில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்துங்கூடப் பந்தல் முழுதும் வெறிச்சோடிக் கிடப்பது போலவே தோன்றியது.அப்புறம் அவரால் விமான கூடத்துக்குக் காரில் போவது கூடச் சிரமமாகி விட்டது. அதனால் ஏர்போர்ட்டுக்கு ஹெலி காப்டரில்' போய், அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் பயணமானர். அதற்குப் பிறகு நானும், சாஸ்திரியும் விசா கப்பட்டணத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அங்கிருந்து சாஸ்திரி டில்லி போய் விட் டார். நான் சென்னைக்குத் திரும்பி விட்டேன்.

அப்புறம் சில நாட்களுக்கெல்லாம் நேரு என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். மந்திரி பதவியிலிருந்து விலகியிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மீண்டும் காபினெட்டில் எடுத்துக் கொள்வது பற்றி என்னைக் கலந்தாலோசித்தார். அப்போது வேறு சில மந்திரிகளும் (காமராஜ் திட்டத்தின் கீழ்) விலகியிருந்ததால் சாஸ்திரியை மட்டும் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிலருக்கு ஆட்சேபம் இருந்தது. நான் அச்சமயம் இந்திரா காந்தியின் பெயரைப் பிரஸ்தாபித்தேன்.

'இந்திராவைப் பற்றிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி விட்டார். நேரு. பின்னல் பார்த்துக் கொள்ளலாம் என்று நேரு அப்போது சொன்னது என் மனத்திலேயே இருந்து கொண்டிருந்தது. தமக்குப் பிறகு ஒரு வேளை இந்திரா காந்தி மந்திரியாக

10