பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரன் காமராஜிடம் பார்வதி அம்மாள் வைத்திருந்த அள வற்ற அன்பே இதற்குக் காரணம். தமக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்து விட்டதால், குடும்ப வழி அற்றுவிடக் கூடாதே என்பதற்காகக் காமராஜின் தந்தையை அவர் தத்து எடுத்துக் கொண்டார். தம்முடைய தத்துப் பிள்ளைக்குப் பிறந்த அருமைச் செல்வன் திருமணம் செய்து கொள்வான், குடும்பம் பெருகும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை சிதறும் வகையில் காமராஜ் சிறை சென்ற அதிர்ச் சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: மூர்ச்சையுற் றுப் படுத்த ப்டுக்கையாகி விட்டார். -

காமராஜுக்கு இந்தச் செய்தியைச் சொல்வதற்காக அவரு டைய உறவினர்களான துரைசாமி நாடாரும், தனுஷ்கோடி நாடாரும் பெல்லாரி சிறைக்குச் சென்ருர்கள். அவர்களைக் கண் டதும், 'எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டார் காமராஜ்.

'உன்னைப் பாட்டியார் பார்க்க வேண்டுமாம். படுத்த படுக் கையாகக் கிடக்கிரு.ர். பரோலில் அழைத்துச் செல்ல வந்திருக்கி ருேம். அதற்கான உத்தரவுகூட வாங்கி விட்டோம்” என்ருர்கள் வந்தவர்கள். . . . . . . . . . - .

'நான் வர முடியாது. பரோலில் சென்று வருபவர்கள் யோக்கியப் பொறுப்பானவர்கள் என்ற நற்சாட்சிப் பத்திரம் கேட்பார்கள் சிறை அதிகாரிகள். அம்மாதிரி செய்வது என் கொள்கைக்கு விரோதமானது' என்று கூறி, வந்தவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார் காமராஜ்.

பின்னர், ஒராண்டுக் காலம் கழித்து காந்தி இர்வின் உடன் படிக்கை ஏற்பட்டத்ால் சிறையிலிருந்தவர்களெல்லாம் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களுடன் காமராஜும் வெளியே வந்தார். விடுதலை பெற்றதும் பாட்டியைப் பார்க்கவிருதுநக ருக்கு விரைந்தார். பேரனைக் காண அதுவரை உயிரை வைத்துக் கொண்டிருந்த பாாவதி அம்மையார் காமராஜைக் கண்ட பிறகே கண்களை மூடிஞர்.

1931-இல் மகாத்மா காந்தி வட்டமேஜை மகாநாட்டில்’ கலந்து கொள்வதற்காக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ருர். அவருக்கும், பிரிட்டிஷ் சர்க்காருக்கும் அங்கு நடைபெற்ற

101