பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு எந்த வழியாகச் சிறைக்குப் போகலாம்? என்ன கிளர்ச்சி செய்யலாம்?' என்று காமராஜ் யோசித்துக் கொண் டிருந்தபோது விருதுநகர்ப் போலீஸார் அவரைக் கைதுசெய்து கொண்டு போய் ஒரு வழக்கைத் தொடுத்தார்கள். 'விருது நகர் தபாலாபீஸ் மீதும், ரீவில்லிபுத்துார்ப் போலீஸ் ஸ்டேஷன் மீதும் காமராஜ் வெடிகுண்டை வீசிஞர்' என்பது அந்த வழக்கு மதுரை தேச பக்தரும் வக்கீலுமான திரு. ஜார்ஜ் ஜோசப் எதிரிகளுக்காக வழக்கை நடத்திப் போலீஸ் ஜோடனை களைத் தகர்த்தெறிந்தார். இதன் பயஞகக் காமராஜ் அந்த வழக் கிலிருந்து விடுதலை பெற்ருர். -

அந்தக் காலத்தில் காமராஜூக்கு உற்ற துணைவர்களா யிருந்து உதவி செய்தவர்கள் இரண்டு பேர்.ஒருவர் முத்தசாமி, மற்றவர் தங்கப்ப நாடார். முத்துசாமியும் காமராஜும் இரட்டையர் போல் வாழ்ந்து வந்தார்கள். காங்கிரஸ் வேலை களே இருவரும் சேர்ந்தே செய்தார்கள். ஒருவரை ஒருவர் பிரிந்து அவர்கள் இருந்ததேயில்லை. தங்கப்ப நாடார் காமராஜின் பொது வேலைகளுக்கு வேண்டிய பண உதவிகளைச் செய்து வந்தார். மிளகாய் வியாபர்ரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆளுலும் காலளு செலவழிப்பதாயிருந்தாலும் கணக்குப் பார்த்தே செலவழிப்பார். ஒரு சமயம் அவர் சந்தைக்குப் போயிருந்தர்ர். வீடு திரும்ப வண்டி வாடகை கொடுக்க வேண்டாம்ென்பதற் காக அவர் கொளுத்தும் வெயிலில் தட்ந்தே வருவதென்று முடிவு செய்தார். எதிர்பாராத விதமாக, வரும் வழியில் வெயில் தாங்காமல் அவர் கீழே விழுந்து இறந்து விட்டார். அவ்வளவு சிக்கனமானவர் காமராஜின் பொது வேலைகளுக்கு மட்டும்தாராளமாகப் பனங் கொடுத்து வந்தது அவருடைய தேச பக்தியை மட்டும் காட்டுவதாயில்லை: காமராஜ் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் காட்டுவதாயிருந்தது.

1942 இயக்கத்தில் ண்கதான காமராஜை வட நாட்டுச் சிறைச்சாலைக்கு கொண்டு போகப் போகிருர்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தங்கப்ப் நாடார் சென்னைக்கு விாைந்து சென்று ஒரு நண்பரிடம் ஐம்பது ரூபாயைக்

{Ꮊ$

103