பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

இந்திய வரலாற்றில் எத்தனையோ ஊர்களும் நகரங்களும் அழியாத இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்ருகப் பங்களூரும் ஆகிவிட்டது. 'காங்கிரஸ்' என்ற மாபெரும் ஸ்தாபனத்தை உடைத்த, அல்லது உடைவதற்குக் காரண மாயிருந்த பெருமை அதைச் சேர்ந்தது தானே? . . .

1969 இல் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் பங்களு ரில் நடந்தது. அப்போது அங்கே என்ன நடந்ததென்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயந்தான். காங்கிரஸ் 'ஹைகமாண்டில் ஏதோ கசமுச என்பதை பின்னல் இந்திரா காந்தி பங்களூரில் பத்திரிகை நிருபர் கூட்டத்தில் பொரிந்து தள்ளியதிலிருந்து அனைவரும் அறிந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னணி பலருக்குத் தெரியாது. அதைப் பற்றி நான். காமராஜைக் கேட்டேன். அவர் சொன்னர்: r -

"பங்களுர்க் கூட்டத்திற்கு முதல் நாள் இந்திராகாந்தி வரவில்லை. இரண்டாவது நாள்தான் வந்தாங்க வரும்போதே ஏதோ சில தீர்மானங்களைத் தயார் செஞ்சுகிட்டு வந்தாங்க.

"ஸ்ட்ரே தாட்ஸ்ா?" - . ... ." - "ஆமா, ஸ்ட்ரே தாட்ஸ் தரீன். பங்களுர்க் கூட்டத்திலே யாரை ஜனதிபதியா நிறுத்தறது என்கிறதை நிச்சயிக்கத் திட்டம் போட்டிருந்தோம். - . . . . . .

சஞ்சீவ ரெட்டியிடம் 'பிரசிடெண்டாக இருக்க உங் களுக்குச் சம்மதமா?' என்று முதலில் கேட்டது. இந்திராகாந்தி

105

105