பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். அவரும் ஆட்சேபம் இல்லை என்று சொல்லி விட் டார். நான் தடை செய்வேனே என்று அவருக்குப் பயம். சஞ்சீவ ரெட்டியைச் சந்திக்கிறதுக்கு முன்னல் இந்திராகாந்தி என்னிடம் யோசனை கேட்டாங்க எனக்கு என்னவோ கிரியை பிரசிடெண்டாப் போட இஷ்டமில்லை. அதற்கான காரணங்களை விளக்கினேன். ஏன், ஜகஜீவன்ராமைப் போட லாமேன்னேன். 'இல்லை, அவர் காபினெட்லே இருக்கணும்னு இந்திராகாந்தி சொன்னங்க. மொரார்ஜியைப் போடலாம்னு நினைச்சேன்; அவரைப் பற்றி ஒரு புகார். அதாவது சில முற்போக்குச் சட்டங்களுக்கு அவர் உற்சாகமாக ஆதரவு தருவதில்லை என்று புகார். இது ஆதாரமில்லாத புகார் என்ருலும் பரவலாக இருந்தது. இரண்டு நாள் கழிச்சு வந்து இந்திராகாந்தி என்னிடம் சஞ்சீவ ரெட்டியைப் போடலாமா?. என்று கேட்டாங்க. செய்யுங்கன்னேன். - -

நான் திருப்பதிக்கு டில்லியிலிருந்து பிளேன்ல வரேன் - ரெட்டியும் அதே பிளேன்ல வந்தார். விமானத்திலே சந்திச் சோம். 'இந்திரா காந்தி என்னை ஜனதிபதியா நிற்கச் சொல்ருங்க. நீங்க என்ன சொல்lங்க? அப்படின்னு கேட்டாரு. நான் மொரார்ஜியை ஸ்ப்போர்ட் பண்ணுவேன்னு அவருக்குச் சந்தேகம். விஷயம் என்ன தெரியுமா? மொரார்ஜியை நான் ஆதரிக்கத் தயாராக இருந்தாலும் அவர் நிற்கத் தயாராக இல்லையே! 'நான் ஜனதிபதியாக நிற்க மாட்டேன். வேணும்னு இந்திரா காந்தியை நிற்கச் சொல் லுங்க'ன்னு அவர் சொல்லி விட்டார். இந்த பேக் ரவுண்டு' சஞ்சீவ ரெட்டிக்குத் தெரியாது. அதல்ை அவருக்கு என் மேல் சந்தேகம். நான் சிரிச்சுக்கிட்டே எனக்குச் சம்மதம்னு சொன்னேன். அத்துடன், அந்த அம்மாவை நம்பாதீங்க. ஜாக்கிரதையாயிருங்க'ன்னும் சொல்லி வச்சேன்..." . . . . . . .

ஏன் இப்படிச் சொன்னர் காமராஜ்: 1967 தேர்தலுக்குப் பிறகு மந்திரி சபையில் இந்திரா காந்தி கடைசி வரையில் சஞ்சீவ ரெட்டியைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்திரா காந்திக்கு அவரை என்னவோ பிடிக்கவில்லை. அப்புறம் சபா நாயகராக அவரை நிற்கச் சொன்ஞர்கள். அதனல் தான்

106

106