பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அந்த அம்மாவை நம்பாதிங்க' என்று காமராஜ் சொல்லி வைத்தார்.

"யாரை ஜனதிபதியாகத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய இந்தப் பேச்சு வார்த்தைகள் நடந்த ஒரிரு தினங்களில் சஞ்சீவ ரெட்டி பார்லிமெண்ட் குழுவினருடன் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுவிட்டார். நாம்தான் அடுத்த ஜனதிபதி என்று அவர் அப்போதே நிச்சயம் செய்து கொண்டு விட்டார். பங்களுர்க் கூட்டத்திலும் அவரையே தேர்ந்தெடுக்கத் தயாராக இருந்தோம். இது ஒரு ஃபார் மாலிடிதான். ஆனல் அன்றைய தினம் என்ன நடந்தது தெரியுமா? பகல் பன்னிரண்டு மணிக்குக் கூட்டம். பத்து மணிக்கு ஜகஜீவன்ராம் என்னிடம் வந்தார். ‘என்னை ஜனதிபதி பதவிக்கு நிற்கச் சொல்ருங்க இந்திரா காந்தி அப்படின்னு சொன்னர். எனக்கு ஒரே ஆச்சரியமாப் போயிடிச்சு. முன்னல் ஜகஜவன்ராமைப் போடலாம்னு நான்

சொன்னபோது, 'காபினெட்டில் அவர் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது' என்கிற மாதிரி சொன்னவங்க. இப்போ

.

ஏன் ஒரேயடியாக மாறிட்டாங்கன்னு எனக்கும் புரியலே. 'ரெட்டியைப் போடறதுன்னு பேச்சாச்சே, அவரை ஏன் மாத்தனும்?'னு கேட்டேன். அவர் பேசாம இருந்தார். சரி, சவான் என்ன சொல்ருர்?'ன்னு கேட்டேன். 'அவர் என்னை ஸப்போர்ட் செய்யருராம் என்ருர் ஜகஜீவன்ராம். சரி, மீட்டிங்கில் எல்லாம் விவரமாகப் பேகி கொள்ளலாம்'னு சொல்லி அனுப்பிவிட்டேன்.

மீட்டிங்கில் இந்த விஷயம் ஆலோசனைக்கு வந்தது:

'சஞ்சீவ ரெட்டியை நிறுத்தி வைக்கலாம்’னு பட்டில் சொன்னர். 'ஜகஜீவன்ராமைப் போடணும்னு இந்திரா காந்தி

சொன்னங்க.'

'வோட்டு எடுக்கப்பட்டதா?' - "வோட்டு எடுக்கிற வழக்கம் இல்லை. மெஜாரிட்டி

சம்மதிச்சு ஏகோபித்த தீர்மானம் போடறதுதான் வழக்கம்.

பக்ருதீன் அகமதும் இந்திரா காந்தியும் ஜகஜீவன்ராமைப்

போடலாம் என்ருர்கள். சவானே சஞ்சீவ ரெட்டியை ஆதரித் தார். ஆக, மெஜாரிட்டி சஞ்சீவரெட்டிக்கு என்ருகி விட்டது.

107

107