பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுநாள் பத்திரிகைகளிலும் செய்தி வெளியாயிற்று. இந்திரா காந்திக்கு ஒரே கோபம். முக்கியமாக சவானின் மேல் தான் கோபம், கடைசி நிமிஷத்தில் அவர் மாறி விட்டார் என்று. அதனால் இந்திரா காந்தி டில்லிக்கு வந்ததும் முதலில் அவரை நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். சரியான காரணம் கிடைக்கவில்லை. அடுத்தாற்போல் அந்தக் கோபம் மொரார்ஜி மேல் திரும்பியது. முற்போக்குச் சட்டங்களுக்கு உதவிப் பிரதமரான மொரார்ஜி முழு மனத்துடன் ஆதரவு தர மாட்டார் என்ற கற்பனைக் குற்றச்சாட்டைக் கொண்டு அவரை ‘டிஸ்மிஸ்’ செய்தார். ‘போர்ட்ஃபோலியோ’ எடுத்துட்டாங்கன்னா ஏறக்குறைய டிஸ்மிஸ் தானே? ஒரு டெபுடி பிரைம் மினிஸ்டரை இவ்வளவு கேவலமா நடத்தினதிலே எனக்கு ரொம்ப வருத்தம். இந்திரா காந்தி அத்துடன் திருப்தி அடையவில்லை, மேலே மேலே ஏதேதோ செய்து கிட்டே போனாங்க. அதனால் பின்னலே நடந்தவை எல்லாவற்றுக்கும் அவரே பொறுப்பாளி!” என்றார் காமராஜ்.

108