பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

Tெட்டு வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் ராஜாஜியைச் சந்தித்தார் காமராஜ், இது பத்திரிகைகளில் பெரிய சேதியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. விசேஷப் புகைப்படங்கள் வேறு எடுத்து வெளியிட்டிருந்தார்கள். - -

இதற்குச் சில நாட்களுக்கு முன்னல் காமராஜூடன் பேசிக் கொண்டிருந்த போது, "ராஜாஜி இப்போதெல்லாம் நீங்கள் கூறுவதை ஆதரிக்கிருரே, உங்களிருவருக்கும் பல விஷயங் களில் கருத்து ஒற்றுமை காணப்படுகிறதே. நீங்கள் ராஜாஜி யைப் பார்த்துப்பேசினீர்களா?” என்று கேட்டேன். -

'நான் அவரை இன்னும் பார்க்கவில்லை. ஆளுல் அவரு டைய அறிக்கைகளையும், பேச்சுக்களையும் கவனமாகப் படிச்சிக் கிட்டு வர்றேன். அவர் சொல்கிற விஷயங்களில் நியாயம் இருக்கிறது. நான் சொல்லுகிற கருத்துக்களை அவர் ஏத்துக்கிற மாதிரி படுது. போகட்டும்... இப்போ நான் , அவரைப் பார்த்தா, பத்திரிகைகாரங்க ஏதேதோ.கற்பனை பண்ணி எழுதி விடுவாங்க. இதனுல் காரியம் பாதகமாப் போயிட்டாலும் போயிடும். சரியான சமயத்தில் அவரைப் பார்க்கணும்னு நெனைச்சுகிட்டு இருக்கேன்' என்ருர். -

ராஜாஜிக்கும், காமராஜூக்கும். விரோதம். அதனல்தான் 1954-இல் அவரை ராஜிநாமாச் செய்ய வைத்து விட்டுக் காமராஜே முதலமைச்சர் ஆளுர் என்று ஒரு பேச்சு இருக்கிறதல் லவா? -அதைப் பற்றியும் கேட்டேன். அதெல்லாம் ஆதார மற்றது' என்ருர் காமராஜ். அப்போது நடந்தது இதுதானும்:

I 0Ꭶ

109