பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரட்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் இருந்திருக்குமோ என்னவோ? அப்படி அவர் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. நாளுகவே அப்படி இருக்கலாமோ என்று ஊகித்துக் கொண்டேன்.' "நேரு இறக்கும் போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்?கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தீர்களா?" "இல்லை.சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று டில்லியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.எழுந்து போய்ப் பேசினேன். நேருவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே புறப்பட்டு வரும் படி சாஸ்திரி என்னிடம் சொன்னார். நான் அடுத்த விமானத்தைப் பிடித்து டில்லிக்குப் பறந்தேன்.போகும் போது விமானத்திலேயே'பகல் இரண்டு மணிக்கு நேரு இறந்து விட்டார்’என்று செய்தி சொன்னார்கள். நான் டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்குள்ளாகவே பிரஸிடண்ட் ராதாகிருஷ்ணன்.நந்தாவைத் தாற்காலிகப் பிரதமராக நியமித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.ஜி.ராஜகோபாலனும்,வேறு சில நண். பர்களும் எனக்காக விமான கூடத்தில் காத்திருந்தார்கள்.

அப்போது என்னைப் பலர் அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நேருஜியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை நான் யாரிடமும் பேச வில்லை.அப்புறந்தான் எல்லாத் தலைவர்களையும்,மந்திரிகளையும், பார்லிமெண்ட் மெம்பர்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசினேன்.என் மனத்தில் சாஸ்திரியே பிரதமராக வரலாம் என்று இருந்த போதிலும் அந்த அபிப்பிராயத்தை நான் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.தாம் பிரதமராக வரவேண்டுமென்ற எண்ணம் மொரார்ஜி தேசாய்க்கு இருந்தது.அவரிடமும் நான் பேசினேன். 'எல்லோரும் சாஸ்திரியைத்தான் போட வேண்டு மென்று சொல்கிறார்கள்.ஆகையால் நீங்கள் போட்டி போடாமல் இருப்பது நல்லது' என்றேன். அவர்,இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு, என் பேச்சை ஒப்புக்

11