பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது காமராஜ் மலேசி யாவுக்குச் சென்றிருந்தார். அப்போது ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ராஜாஜிக்கு எதிராகக் கையெழுத்து வேட்டை ஆடிக் கொண் டிருந்தார்கள். காமராஜ் ஊர் திரும்பிய சமயம் ராஜாஜி ராஜி நாமா செய்து விட்டார். அவருடைய ராஜிநாமாவுக்குக் காரண மாயிருந்தவர்கள் காமராஜ் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினர்கள். 'ஒரு நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக் கொண் டால் நான் தலைமை ஏற்கிறேன்' என்று சொன்னர் காமராஜ். அவர்கள்'சரி என்று கூறி, அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத் தனர். х -

"நான் என்ன செய்தேன், தெரியுமா? ராஜாஜி மந்திரி சபையில் இருந்தவர்களை அப்படியே மந்திரிங்களா வச்சுக்கிட் டேன். எனக்குப் பதவி, உனக்குப் புதவி என்று யாரையும் வரவிட்வில்லை. மந்திரி சபை அமைப்பதில் யாரும் குறுக்கிடக் கூடாது' என்பதுதான் என் கண்டிஷன். ராஜாஜியின் மேல். எனக்கு விரோதம் என்பது உண்மையாக இருந்தால் அவர் வைத்திருந்த மந்திரிகளை நான் எடுத்துக்கிட்டிருப்பேஞ...? ராஜாஜி செய்த ஒரு சில காரியங்கள், பல எம்.எல்.ஏ.க்களுக் குப் பிடிக்கவில்லை. அதுதான் உண்மையே தவிர, எனக்கு அவர் மேல் கோபம் எதுவும் கிடையாது' என்ருர் காமராஜ்.

"அது சரி, இப்போது உங்களுக்கு இந்திரா காந்தியின் மேல் கோபம் என்கிருர்களே?" -

"கோபம் ஒன்றும் இல்லை; கொள்கைகள் சிலவற்றில் மன

வேற்றும்ை இருந்தது. முக்கியமாக ரூபாய் மதிப்பைக் குறைத் தது தவறு என்பது என் கருத்து. திடீரென்று யாரையும் கலந்தா லோசிக்காமல் அதை அவங்க செய்துட்டாங்க. 'என்னம்மா, இப்படி அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டிங்களே?ன்னு கேட் டேன். அதுக்கு அந்த அம்மா என்ன சொன்னங்க, தெரியுமா? 'இதெல்லாம் ரகசியமாகச் செய்ய வேண்டிய காரியம். எல்லா ரையும் கலந்து செய்யனுமின்ன வெளியே பரவி விடும் - அப்படின்னு சொன்னங்க. இது எனக்குத் தெரியாத சமா சாரமா? அவங்க சொன்ன காரணம் சப்பைக்கட்டு மாதிரி பட்டுது. அப்பவே எனக்குத் தோணிடுச்சு...'

II.0

110