பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜ் முடிக்கவில்க்ல ; 'பாங்குகளைத் தேசிய மயமாக்கி யது சரியான காரியந்தானே?' என்று கேட்டேன்.

காமராஜ் விளக்கினர். - - 'பாங்குகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்பது எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்ததுதான். மொரார்ஜி தேசாய் இதற்கு ஆதரவு தரமாட்டார் என்று இந்திரா காந்தி கருதினர். ‘மந்திரி சபைக் கூட்டத்தில் முடிவெடுங்கள். அதை நிறைவேற்ற வேண்டியது நிதி அமைச்சரின் பொறுப்பு. மந்திரி சபையின் முடிவை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்ருல், அவரே விலகித்தானே ஆக வேண்டும்?' என்றேன். இந்திரா காந்தி அப்படி எதுவும் செய்யவில்லை. மொரார்ஜி தடையாக இருப்பார் என்று தாமே முடிவெடுத்து அவரு டைய இலாகாவை எடுத்துக் கொண்டார். ஒரு நாட்டின் உதவிப் பிரதமரை இப்படியா அலட்சியமாக நடத்துவது ? தாம் கோபத்தில் அப்படிச் செய்யவில்லை என்று காண்பிக் கவோ என்னவோ, அவசர அவசரமாகப் பாங்குகளைத் தேசிய மயமாக்கினர். ஆக, இது எந்தச் சமயத்தில், எந்த உள்நோக்குடன் செய்யப்பட்டது என்பதே கேள்வி. நான் சொன்னபடி காபினெட்டில் முடிவெடுத்தாங்களா? மொரார்ஜி 'மாட்டேன்' என்று குறுக்கே நின்ருரா? இல் லையே..! இப்படி அவசர அவசரமாச் செய்தாங்க... ஆரம் பத்திலே பூக்கடைக்காரருக்கும், பட்டாணிக் கடைக்காரருக் கும் கடன் கொடுக்கிருங்கன்னு பிரபலப்படுத்திட்டாங்க... இப்போ என்ன ஆச்சு? ஒரு வருஷம் ஆச்சு, ஃபாலோ அப் காரியம் சரியாச் செய்யலையே..! கடனும் சுலபமாக் கிடைக்கலையாம் : செக்யூரிட்டி கேட்கிருங்களாம். இதை யெல்லாம் எதுக்குச் சொல்ல வந்தேன்ஞ பாங்குகளைத் தேசிய மயமாக்க வேண்டுமென்ற நோக்கத்திற்குப் பின்னே மொரார்ஜிக்குப் பிற்போக்குவாதின்னு பட்டம் கட்டனும் என்பதுதானே ஐடியாவா இருந்திருக்குன்னேன்

சவான் பங்களூரில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக இருந்து, பின்னல் இந்திரா காந்தியின் பக்கம் சென்று விட்டாரல்லவா? - அதைப் பற்றியும் காமராஜைக் கேட்டேன்.

111

111