பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“சவானுக்கு அவங்க செய்தது சரியில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் தைரியமில்லே — என்னவோ மராட்டா என்கிறார். வீர சிவாஜி மாநிலம் என்கிறார். பயப்படறாரே! நான் என்ன செய்வேன்னேன்? அவர் ரிஸ்க் எடுக்கப் பயப்படறாரு!” என்றார் காமராஜ்.

“அவர் பிரதமராக வருவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களே?”

“ஆமாம், இருக்கத்தான் இருந்தது. இப்போது இல்லாவிடினும் 1972-க்குப் பிறகு அந்த வாய்ப்பு அவருக்கு வந்தே இருக்கும். அவரது பயந்த சுபாவமே அந்த வாய்ப்புகளை வர விடாமல் செய்து விட்டது. அடுத்த தேர்தலுக்குப் பிறகு சவான் பிரதம மந்திரியாக வருவதில் மொரார்ஜிக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால் இன்றுள்ள நிலைமை அந்த வாய்ப்புகளை மாற்றி விட்டன. இப்ப அதைப் பற்றிப் பேசறதிலே என்ன லாபம்?” என்றார் காமராஜ்.

112