பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

காங்கிரஸ் மகாசபைக்குக் காமராஜ் தலைவர்ானது தொண் டர்களுக்கெல்லாம் அளவற்ற உற்சாக்த்தைத் தந்தது. சாதா ரணத் தொண்டராகத் தம் அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய காமராஜ், மகாசபையின் தலைவர் பதவிக்கு உயர்ந்தது மட்டு மல்ல அவர்களுடைய உற்சாகத்துக்குக் காரணம்: தொண்ட னுக்கும் மேலே உயர வாய்ப்புகளும். வழிகளும் காங்கிரஸில் உள்ளன என்பதும் காரணமாகும்.

'காமராஜ் திட்டம்' என்ற தம் திட்டத்தைத் தாமே ஏற்று அவர் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். ஆளுலும் காங் கிரஸ் தலைவர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டி வந்தது. சூழ்நிலை அப்பதவியை அவர் மேல் சுமத்தி விட்டது.

பதவியை நாடிப் பேர்வது என்பது காமராஜுக்குத் தெரி யாத வித்தை அவருடைய சரித்திரமே அதற்குச் சான்று. அதன் படி பதவிதான் அவரை எப்போதும் துரத்திக் கொண்டு வந்

தலைவர் பதவியை எனக்குக் கொடுக்காதிங்கன்னு சொன் னேன்; யாரும் கேட்கல. எலெக்ஷனுக்கு நாலஞ்சு மாசத்துக்கு முந்தி நேரு என்னிடம் தலைவராக இருக்கும்படி சொன்னர். பெரிய பொறுப்பாச்சேன்னேன். எத்தனையோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி வருமேன்னேன். முதலமைச்சர் வேலையை விட்டது, தமிழ் நாட்டிலே கட்சியைப் பலப்படுத்தற எண்ணத் தோடுதானே, மறுபடியும் பதவியை ஏத்துக்கிடறது எப்படின் னேன். அப்போ நேரு என் பேச்சைக் கேட்டுக்கிட்டார். மேலே

113

113