பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை வற்புறுத்தல்ல. பின்னல் நிலைமைகள் மாறிப் போய் விட்ட்ன' என்ருர் காமராஜ், o

இது முழுக்க முழுக்க உண்மை. சின்ன மந்திரி சபையை வைத்துக் கொண்டு குழப்பம், பிளவு எதுவுமின்றிச் சீரான ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வந்தவர்.காமராஜ். அவரே கட்சிக்காகப் பதவியை விட்டது அவருடைய மதிப்பை அகில இந்திய அளவில் உயர்த்தி விட்டது. அவருடைய புகழ் பெற்ற 'காமராஜ் திட்டத்தைத் தக்க சமயத்தில் கொண்டு வரப்பட்ட 'பெனிசிலின் சிகிச்சை என்று மக்கள் நினைத்தனர். ஆகவே, அவரையே தலைவராகப் போட முடிவெடுத்தது காங்கிரஸ் மகாசபை.

காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த சில ஆண்டுகள் மறக்க முடியாத ஆண்டுகள். அப்போது இந்திய வரலாற்றில் அவருடைய அரிய செயல்கள் பல இடம் பெற்றன. -

காமராஜின் அகில் இந்தியச் செல்வாக்கைக் கண்டு வெளி நாட்டினரும் வியந்தனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் காமரா ஜைத் தங்கள் நாட்டிற்கு அழைத்தன.

ஒரு கட்சித் தலைவரை ரஷ்ய அரசு அழைத்தது அதுதான் முதல் தடவை. கட்சி என்ருல் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சி என்பதை இங்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்களுடைய அழைப்புக்களைக் காமராஜ் ஏற்ருர். ஆனல் இந்தியா-பாகிஸ்தான் பூசல் போன்ற காரணங்களால் அவ்ர் அப்போது நாட்டை விட்டு வெளியே போக இயலவில்லை. அந்தப் பூசலை ஓரளவு சமரசமாகத் தீர்த்து வைக்கக் கோளிஜின் முயற்சி எடுத்துக் கொண்டார். அதன் பயஞ்கத் தாஷ்கண்ட் ஒப்பந்தம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக லால்பகதூர் சாஸ் திரி அங்கே மரணம் அடைந்ததும் அவருடைய சடலத்துடன் டில்லி வந்த கோளிஜின், மறுபடியும் காமராஜைத் தம் நாட் டிற்கு வருமாறு அழைத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் காமராஜ் ரஷ்யா செல்லத் திட்ட மிட்டார். ஒரு கட்சித் தலைவர் இப்படி வெளிநாட்டினர் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்ற சர்ச்சை அப்போது, எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் திரு. ஆர். வேங்கட்

114

114