பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமனுடன் அவர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்தார். அத் துடன் யூகோஸ்லேவியா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளுக் கும் விஜயம் செய்தார். - - -

காமராஜை ரஷ்ய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்ருர்கள். அங்கே ரஷ்ய பார்லிமெண்ட் தலைவரின் விருந்தினராகக் காம ராஜ் இருந்தார். - - . .

காமராஜின் எளிமை ரஷ்ய மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதே நான்கு முழ வேட்டி : முக்கால் கைச் சட்டை மேல் துண்டு. கிரெம்ளினில் கோஸிஜினுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய போதும் அதே உடைதான். அங்குள்ள தொழிற்சாலை களையும், மற்ற இடங்களையும் பார்க்கச் சென்ற போதும் அதே உடைதான். - --

சோவியத் பத்திரிகைகள் வேறு காமராஜ் விஜயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதின. இந்தியத் துணைக் கண்டத் தில் காமராஜ் ஒரு முக்கியப் புள்ளி என்பதை ரஷ்யாவும், ரஷ்யப் பத்திரிகைகளும் உணர்ந்திருந்ததே அதற்குக் காரணம்.

ரஷ்யாவுக்குப் பிறகு வேறு பல நாடுகளுக்கும் காமராஜ் சென்று திரும்பினர். - - " . . . .

ரஷ்யாவுக்குச் சென்றதால் கம்யூனிஸ்டுகளின் பக்கம் சாய்ந்து விடுவார் என்று ஒரு பேச்சு அப்போது இருந்தது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை.இந்தியாவின் நடுநிலக் கொள் கைக்கு ரஷ்யாவினல் ஊறு நேராது என்பதைக் காமராஜ் கண்டார். நாம் ராணுவக் கூட்டு எதிலும் சேராததை ரஷ்யா பாராட்டுகிறது.என்பதையும் அவர் அறிந்தார்.

ரஷ்யாவில் எந்தப் பொருளையும் காமராஜ் வாங்கவில்லை. பரிசுகளையும், அன்பளிப்புகளையுங்கூட அவர் தம்முடன் எடுத்து வரவில்லை. அன்றும். இன்றும் தமக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத பெருந்தலைவர் காமராஜ்.

ரஷ்ய விஜயத்திற்குப் பிறகு அவர் அமெரிக்கா போகத் திட்டமிட்டார். பல காரணங்களால் அது தள்ளிப் போடப் பட்டு விட்டது. அதற்குள் அவருடைய காங்கிரஸ் தலைவர் பதவிக் காலமும் முடிவுற்றது. அவருக்குப் பின் திரு. நிஜலிங் கப்பா காங்கிரஸ் தலைவராளுர்,

113

115