பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம்; நிஜலிங்கப்பா பெயர் பத்திரிகைகளில் வந்த போது, அவர் என் கேண்டிடேட்' என்று நீங்கள் சொன்னதாக ஒரு செய்தி வந்ததே, அதன் பின்னணி என்ன?" என்று கேட் டேன்.

"அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. காங்கிரஸ் பிரசி டெண்டா யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தது. யார் யார் பெயரை எல்லாமோ யோசனை செய்தோம். எனக்கு மோகன்லால் சுகாதியாவைப் போடலாம்னு எண்ணம். இந் திரா காந்தியிடம் சொன்னேன். இந்த யோசனைகள் நடந்து கொண்டிருக்கிற போது டில்லிக்கு ஏதோ வேலையாக வந்திருந் தார் நிஜலிங்கப்பா. அவர் அப்போது மைசூர் முதல் மந்திரி யாக இருந்தார்.

ராத்திரி பத்து மணி வரைக்கும் இந்திரா காந்தி, நான், மற்ற எல்லாரும் அடுத்த தலைவரைப் பற்றிப் பேசி முடிவெடுக் காமல் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். அப்புறம் இந்திரா காந்தி நிஜலிங்கப்பாவைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க. அவர் சம்மதம்னு சொன்னலும் 'காமராஜைக் கேட்கணுமே” என்று சொல்லியிருக்கார். 'இல்லை, நீங்க சரின்னு சொல்லுங்க. அவரைக் காலேயில் கேட்டுக் கொள்ளலாம் என்று இந்திரா காந்தி சொல்லிட்டாங்க. அப்போது மணி 11, 12 இருக்கும்.

காலையில் எழுந்து பேப்பரைப் பார்க்கிறேன். அடுத்த தலைவர் நிஜலிங்கப்பா!'ன்னு போட்டிருந்தது. ராத்திரி அவர் கிட்டே சம்மதத்தை வாங்கிக்கிட்டு உடனே பேப்பருக்கு நியூஸ் கொடுத்துட்டாங்க. நிஜலிங்கப்பர் பேப்பரைப் பார்த்ததும் 'என்னடா இது?ன்னு ஆச்சரியப்பட்டார். நேராக என் விட் டுக்கு வந்தார். அப்பதான் நான் ஷேவ் பண்ணிக்கிட்டிருக்கேன். அவர் விஷயத்தைச் சொன்ஞர். நீங்க பிரசிடெண்டாக வருவ தில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாதுன்னு அவ ரிடம் சொன்னேன். உடனே பேப்பருக்கு அறிக்கை கொடுத் தேன்,'அவர் என் கேண்டிடேட் என்று."

நிஜலிங்கப்பாவுக்கும். காமராஜக்கும் இடையே மனக் கசப்பை ஏற்படுத்த வேண்டும் என்ருே என்னவோ, இரவோடு இரவாக அவருடைய சம்மதம் பெற்றுப் பத்திரிகைகளுக்கும்

116

116