பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்தி கொடுத்து விட்டார் இந்திரா காந்தி, ஆனால் காமராஜிடம் அவருடைய சூழ்ச்சி பலிக்கவில்லை! நிஜலிங்கப்பாவைத் தாம் ஆதரிப்பதாக உடனே அறிக்கை விட்டு விட்டார்.

அன்று எந்த நோக்கத்துடன் நிஜலிங்கப்பாவை ‘என் கேண்டிடேட்’ என்று காமராஜ் கூறினாரோ, பின்னால் ஏற்பட்ட பல பெரும் பிரச்னைகளின் போதும், சூறாவளிகளின் போதும் அவருடைய ஆதரவு நிஜலிங்கப்பாவிற்குப் பூரணமாக இருந்தது. காமராஜின் துணை இல்லாதிருந்தால் நிஜலிங்கப்பா அவ்வளவு துணிவான காரியங்கள் பலவற்றைச் செய்திருப்பாரா என்பது சந்தேகந்தான்.

117