பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராஜூடன் ஒரு நாள்

- இரண்டு மாதங்களுக்கு முன் திரு.காமராஜ் அவர்களைச் சந்திக்க நான் டில்லிக்குப் போயிருந்த போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டில்லியில் சந்தித் தேன். அப்போது முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியி லிருந்து விலகி விட்ட வெறும் காமராஜராகவே வத்திருந்தார். அன்று மாலை திரு. லால்பகதுர் சாஸ்திரி காமராஜரைக் கான 'மெட்ராஸ் ஹவுஸுக்கு வந்திருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த ரிஸ்ப்ஷன் ஆபீஸர் திரு. தீனதயாளக் கண்ட தும் அவர் "காமராஜைப் பழையபடியே கவனித்துக்கொள்கி நீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறையில் தானே இறக்கியிருக்கிறீர்கள்? உபசரிப்பில் ஒன்றும் குறைவில் இலயே!" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே மாடிக்கு ஏறிச் செண்முt. . . . . . . . . -

காமராஜ் பதவியிலிருந்து விலகி விட்டதால் எங்கே அவ

ரைச் சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுகிருர்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆளுல் உண்மை. யில் காமராஜுக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபசாரம் நடந்து கொண்டிருந்தது. ‘. . . . . . . . . .

அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும், 'என்.ண...? வாங்க..." என்று புன்முறுவலோடு அழைத்தார்

I 18.

118