பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘விசிட்டர்கள் அதிகமில்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அகில இத் தியக் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப் போகிருர்கள். என்பது பற்றிப் பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வெளி யாகியிருந்தன. காமராஜரும் அப்போது அதுபற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணினேன்.

'வால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டு விடலாமே...?' என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன். -

"ஆமாம்: போட்டு விடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிருேம் (நாங்கள் என்பது திரு.சஞ்சீவ. ரெட்டியையும், திரு.அதுல்ய கோஷையும் சேர்த்துச் சொன் னது). சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆஞ்ல் அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிருர், இன்ற்ைக்கு மறுபடியும் சாஸ்திரியைச் சந்தித்து கன்வின்ஸ் பண்ணவேண் டும்' என்ருர், * - - - ஆனல் மறுநாள் காலப் பத்திரிகைகளைப் புரட்டிய போது தலைமைப் பதவிக்குக் காமராஜையே காரியக் கமிட்டி தேர்ந் தெடுத்திருப்பதைக் கண்ட போது எனக்கு வியப்புத் தாங்க வில்லை, -

'என்ன இப்படி ஆகி விட்டது?' என்று திரு.காமர்ர் ஜிடம் கேட்டேன். * ・ ー × - - - - - -->

'எனக்கு ஒன்றுமே தெரியாது; காரியக்கமிட்டிக் கூட்டத் தில் அதுல்ய கோஷம், சஞ்சீவ ரெட்டியும் காதைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்" என்ருர் அவர். - எப்படி இருந்தாலும் நல்ல முடிவு' என்று கூறி என் மகிழ்ச் சியைத் தெரிவித்து விட்டு அவரிட்ம் விடை பெற்றுக் கொன் டேன். வாசல் வர்ாந்தாவுக்கு வந்த் போது, தலைவர்களும், மந்திரிகளும், எம்.பி.க்களும் பெருங்கூட்டமாக மலர் மாலைகள், பழத் தட்டுகள் சகிதம் காத்திருந்தனர். . .

'பதினைந்து நாட்களுக்கு முன்ஞல், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னல் பதவியில்லாத சாதாரண

119

119