பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டு விட்டார். அதனால் சாஸ்திரியையே எல்லோரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுப்பது எளிதாயிற்று .

பார்லிமெண்டரி காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது நான் எழுந்து பேசினேன். அன்று ஜூன் மாதம் இரண்டாம் தேதி. பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடைபெற்றது. பார்லிமெண்ட் மெம்பர்கள், முதலமைச்சர்கள் தவிர வெளிநாட்டுப் பிரமுகர்களும், தூதுவர்களுங்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் விசிட்டர் காலரியில் உட்கார்ந்திருந்தார்கள்.

‘நேருஜியைப் போன்ற ஒரு தலைவர் இனிக் கிடைப்பது அசாத்தியம்.இனி தனிப்பட்ட முறையில் யாரும் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கவும் முடியாது.கூட்டாகப் பொறுப் பேற்று, கூட்டுத் தலைமையின் கீழ், கூட்டாக அணுகித்தான் இந்தக் கஷ்டமான பணியை மேற்கொள்ள முடியும். கடந்த காலத்தில் நாம் பல தவறுகள் செய்திருக்கிறோம். நேருஜி நமது மாபெருந் தலைவராயிருந்ததால், அவரிடமிருந்த நம்பிக்கை காரணமாக மக்கள் நம்மை மன்னித்தார்கள். இனி நாம் சிறிய தவறுகள் செய்தாலும் மக்கள் பொறுக்க மாட்டார்கள்’ என்றேன்."

“சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியைப் பிரதமராக்கியதும் தாங்கள்தானே?” என்று கேட்டேன்.

“ஆமாம், ‘நேருவின் மகளாயிற்றே, தப்பாக நடக்க மாட்டார்’ என்ற நம்பிக்கையில் போட்டு விட்டேன். அது ஒரு கதை; அப்புறம் சொல்கிறேன்” என்றார்.

12