பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவி அவரைத் தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறு தல்களும் இரண்டே வாரங்களில் நடந்து விட்டன. ஆளுலும் அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பத வியில் இருந்த போது, ப்தவியை விட்ட போது, பதவி அவ ரைத் தேடி வந்துள்ள போது - ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிருர்' என்ருர் திரு. தீனதயாள்.

திரு. காமராஜ் முதலமைச்சராக இருந்த போது ஒரு சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் நானும் போயிருந்தேன். காரி லேயே கிராமம் கிராமமாகச் சென்று சொற்பொழிவு நிகழ்த்தி விட்டுக் கடைசியாக இரவு பன்னிரண்டு மணிக்கு முசாபரி பங்களா ஒன்றில் தங்கினர். அங்கே படுக்கப் போகுமுன், “சரி, நான் துரங்கப் போகிறேன். என்னைச் சரியாக ஆறு மணிக்கு எழுப்பிவிடுங்க" என்று கூறிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண் டார். உடனே அங்கிருந்தவர்கள் என்ன செய்தார்கள் தெரி யுமா? அந்த அறையின் கதவை வெளிப் பக்கம் பூட்டிக் கொண் டார்கள்! எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. "எதற் காக வெளியே பூட்டி விடுகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

'காமராஜ் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தூங்கி விட்டால் குறித்த நேரத்தில் அவரை எப்படி எழுப்ப முடியும்? அதற்காகத்தான் வெளியே பூட்டிக் கொள்கிருேம்! ஆறு மணிக் குக் கதவைத் திறந்து நாங்கள் எழுப்பி விடுவோம்' என்று பதில் சொன்னர்கள்.

இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வரவே, "இங்கே மெட் ராஸ் ஹவுளில் என்ன செய்கிறீர்கள்?' என்று திரு. தீனதயாள விசாரித்தேன். • . . . . .

“இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு படுக்கப் போவதற்கு மணி பன்னிரண்டு ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை. இரவு அவர் படுத்துக் கொண்டதும் நான் கதவைச் சாத்திக் கொண்டு வந்து விடுவேன். காலையில் இத்தனை மணிக்குக்

120

120