பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காப்பியுடன் எழுப்ப வேண்டும் என்பார். அவர் தூங்கும் போது எத்தனை முறை குரல் கொடுத்தாலும் எழுந்திருக்க மாட்டார். கையினால் மெதுவாகத் தொட்டால் போதும், உடனே எழுந்து விடுவார்.”

"என்ன புத்தகங்கள் படிக்கிறார்?" என்று கேட்டேன்.

"தமிழ்ப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதையும் கவனித்திருக்கிறேன். ஆனால் அவை என்னென்னபுத்தகங்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியாது.பெட்டிக்குள் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறார். அவ்வளவுதான் தெரியும்...”

அவை என்ன புத்தகங்கள் என்பதை எப்படியாவது தெரிந்து கொண்டுவிட வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது.

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களைச் சப்பனமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றி விட்டு, வலது கையை முதுகுப் பக்கமாகச் செலுத்தி இடது தோளைத் தேய்த்தபடியே பத்திரிகை படிப்பதில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார்.

மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் - இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“பத்திரிகைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது...”

"எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்னை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால் அதையுந்தான் பார்ப்பேன். தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின் விசிறியை நிறுத்தி விட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படுக்கை அறை. படுக்கை அறையை ஒட்டினாற் போல் இன்னொரு சின்ன அறை அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. சாதாரணமாக 'விஸிடர்கள்' யாரும் அந்த அறைக்குள் அநுமதிக்கப்படுவதில்லை. அந்தச் சின்ன அறைக்குள் இருந்த சிறுமேஜை, 'கோட்

121