பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்டாண்ட்', முகம் பார்க்கும் கண்ணுடி எல்லாவற்றையும் ஒவ் வொன்முகக் கண்ளுேட்டமிட்டேன்.

"என்ன... என்ன பாக்கlங்க?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். - - - - "ஒன்றுமில்லை; தங்களைக் கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை” என்றேன். "ஒ, தாராளமா இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க” என்று கூறிக் கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்ருக எடுத்துக் கீழை வைத்தார்.

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்:

INSIDEAFRICA-byJohn Gunther ENDS AND MEANS - by Aldous Huxley

TIME MAGAZINE NEWSWEEK

சிந்தனைச் செல்வம் வி.ச. காண்டேகர் இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டேன். நான் கவனிக்காதது போல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை -

'இன்ஸைட் ஆப்பிரிக்கா'வைப் பற்றி இவருக்கு என்ன கவலை? 'இன்லைட் இந்தியா'வைப் பற்றி இவர் படுகிற கவலை போதாதா?’ என்று எண்ணிக் கொண்ட்ேன். யார் கண்டார் கள்? இந்தப் பொல்லாத மனிதர் அகில இந்தியாவுக்கும் ஒரு 'காமராஜ் திட்டம் கொண்டு வந்தது போல் ஆப்பிரிக்கா தேசத்துக்கும் இன்னெரு திட்டம் வைத்திருக்கிருரோ என் னவோ? - * அடுத்தாற் போல் பெட்டியிலிருந்து ஷேவிங் ஸ்ெட்டை எடுத்துக் கண்ணுடி முன் வைத்துக்கொண்டார். அந்த நித்தியக் கட்ம்ை முடிந்ததும் தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார். அங்கு ஏற்கெனவே பல சட்டைகள் இம்மாதிரி மடித்து வைக் கப்பட்டிருந்தன." -

"ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக்கொள்வீர்கள்?'

123

122