பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு இட்லியும், சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம். கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்யும் நாட்களில் சில சமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக வெறும் மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று தோணும். ஆனல் எனக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர் சாதம் போதுமென்று சொன்னல் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டுக் கஷ்டப்படுத்தி விடுவாங்க. என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாகச் சாப்பாடே வேண்டாமென்று சொல்லிப் பட்டினி போட்டு விடுவேன். இதஞல் உடல் நலம் கெட்டுப் போவதில்லை.”.

“தாங்கள் கை கடியாரம் கட்டிக் கொள்வதில்லையே; ஏன்?’ 'அதெல்லாம் எதுக்கு அவசியமில்லை. யாரைக் கேட் டாலும் நேரம் சொல்ருங்க. கிராமங்களுக்குப் போகும்போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன டைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்" என்ருர்.

அன்று நண்பர் ஜி. ராஜகோபாலன் வீட்டில் காலே உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. பொங்கல், வடை, தோசை, இட்லி, சாம்பார், சட்னி இவ்வளவும் தயாரித்து வைத்திருந்

திரு. காமராஜ் மேஜை முன் உட்கார்ந்து மேல் நாட்டுப் பாணியில் கைக்குட்டைப் பிரித்து மடிமீது பரப்பிக் கொண்டு. ஃபோர்க் ஸ்பூன்'இவ்விரண்டு உதவியாலும் தோசை, இட்லி முதலியவற்றை மிக லாவகமாகவும் வேகம்ாகவும் எடுத்து, கீழே

சிந்தாமல் சாப்பிட்டார். • ‘. . . .

"தங்களுக்கு ரொம்பப் பிடித்த சிற்றுண்டி எது?" என்று அதற்கு அவர் பதில் கூறுமுன் பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் “இட்லியும், தேங்காய்ச் சட்னியும்தான்' என்றர்.

"ஆமாம்' என்று அதைப் புன்சிரிப்புடன் ஆமோதித்தார் திரு. காமராஜ்.

"சாப்பாத்தி போட்டால் சாப்பிடுவீர்களா?" "சாப்பிடுவேன்." - -

124

124