பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நாடகம், சினிமா . பார்ப்பதில் விருப்பம் உண்டா? என் னென்ன படம் பார்த்திருக்கிறீர்கள்?" -

“ரொம்பப் பார்த்ததில்லை. அதற்கெல்லாம் நேரம் ஏது? ஏதோ இரண்டொரு படங்கள் பார்த்திருக்கிறேன். ஒளவையார் படம் பார்த்திருக்கிறேன். துண்டு துண்டாக நியூஸ் ரீல், பிரசாரப் படம் இப்படிப்பார்த்திருக்கிறேன்.” - "தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கிருர்களே அவர்கள் எல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?' . . . . . .

“சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவியெல்லாம் சுலபமாகச் செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்து விடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கலெல் லாம் இருக்கும். அவர்கள்ே வக்கீலிடம் கேட்டுக் கொண்டு வந்து இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்லுவாங்க. நான் 'ஆகட்டும், பார்க்கலாம் என்பேன். யாருக்காவது இரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர் களுக்குச் செய்யவில்லையென்ருல் தானே கோபம் வருகிறது? ஆகையால், எல்லோருக்குமே சமமாக இருந்து விடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமா வாங்கியிருப்பான். நீ வாங்கியிருக்கும் மார்க்கை விடக் குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல் என்பேன். அப்படி இருக்காது. ஒரு வேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம் "ஆமாம்! நீ சொன்னது உண்மைதான் என்று ஒப்புக் கொள்வேன். அவன், அதிலேயே திருப்தி அடைந்து போய்விடுவான்!” N.

'தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!’ : . . . . "

'எனக்கு அலுப்பே கிடையாது; அவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆளுல் இதில் எனக்குள்ள சங்கடம், பத்திரிகை படிக்க நேரமில்லாமல்

125.

125