பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போய் விடுவது தான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். ‘விஸிட்டர்’களால் அது தடைப்பட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்க தயார்” என்றார்.

அன்றிரவு மணி பன்னிரண்டு இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிகச் சுவாரசியமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று எட்டிப் பார்த்தேன். வேறொன்றும் இல்லை; கம்ப ராமாயணம்.

126