பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"பஞ்சாப் முதல் மந்திரி கெய்ரோனின் ஆட்கள் என்னைத் தாக்கி என் கையை உடைத்து விட்டார்கள். நான் ஒரு எம்.எல்.ஏ...."

'நம் ஊரில் கை உடைந்தால் புத்தூருக்கல்லவா போவார்கள்?இவர் பாவம்,இங்கே வந்திருக்கிறாரே?' என்று எண்ணிக் கொண்டேன்.

"இங்கே ஏன் வந்திருக்கிறீர்கள்?"

“காமராஜைப் பார்த்து,நடந்த விவரங்களை நேரில் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான்.அவரிடம் சொல்லி விட்டால் என் மனதுக்குச் சாந்தி ஏற்படும்" என்றார்.

திரு. ராம்பியாராவைத் தவிரப் பஞ்சாபிலிருந்து இன்னும் ஏழெட்டுப் பேர் திரு.காமராஜைப்பார்க்க வந்திருந்தார்கள்.அவர்களில் சிலர்,முதன் மந்திரி கெய்ரோனுக்குச் சாதகமானவர்கள்.சிலர் கெய்ரோன் ஆட்சியை பிடிக்காதவர்கள்.

திரு.காமராஜ் அவர்களைக் கும்பலாகச் சேர்த்துப் பார்க்க வில்லை.முதலில்,சமீபத்தில் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்து விட்ட தர்பராசிங்கையும்,கை உடைந்த ராம்பியா ராவையும் தனித்தனியாக அழைத்துப் பேசினார். பின்னர்,திரு.கெய்ரோனுக்குச் சாதகமானவர்களையும்,அப்புறம் அல்லாதவர்களையும் வரச் சொன்னர், எல்லோருக்கும் ஐந்து நிமிஷ நேரம்தான் பேட்டி.

திரு. காமராஜ் அவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொன்னாரோ,என்ன மந்திரம் போட்டாரோ? மேலே சென்றவர்கள் அத்தனை பேரும் திருப்தியுடன் திரும்பி வந்தார்கள்.

அப்புறம், உ.பி. முதல் மந்திரி சி.பி. குப்தா வந்திருந்தார்.

"நீங்கள் அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருங்கள்" என்று மதராஸ் ஹவுஸ் ஆபீஸர் திரு. தீனதயாள் என்னிடம் சொன்னார்.நான் யார் என்பதை அறிந்து கொண்ட திரு.குப்தா என்னைக் கேட்ட முதல் கேள்வி இது தான்:

"காமராஜ் தமிழில்தான் பேசுவாரா?"

"இல்லை; ஆங்கிலத்தில் பேசுவார். தாங்களும் அவரிடம் ஆங்கிலத்திலேயே பேசலாம். தாங்கள் கூறுவதை யெல்லாம்

128