பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் நன்கு புரிந்து கொள்வார். உங்களுக்குத் தேவையான பதில்களையும் ஆங்கிலத்திலேயே சொல்வார்' என்றேன் நான்.

"நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. அதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. காமராஜ் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிராமவாசியா?”

'விருதுநகர் என்ற ஊரில் பிறந்தார். ஓர் எளிய குடும்பத் தில் பிறந்தவர்.” .

“நானும் உங்கள் காமராஜைப் போல் கலியாணமாகாதவன் தான். எனக்கு வயது அறுபத்திரண்டாகிறது" என்ருர்திரு. குப்தா.

அப்போது அங்கே வந்த திரு. தீனதயாள், 'தங்களைக் காமராஜ் அழைக்கிருர்' என்று கூறவே, திரு. குப்தா 'பைல்' கட்டுடன் மாடிக்கு ஏறிச் சென்ருர், -

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் காமராஜும் அவரும் கீழே இறங்கி வந்தார்கள். குப்தா காரில் ஏறிக் கொண்டார்.

காமராஜ் அவரை வழி அனுப்பி விட்டு இந்தப் பக்கம் திரும்பினர். என்னைப் பார்த்துப் புன்சிரிப்புடன், ‘என்ன?” என்று நாவில் ஒர் அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

“ஒன்றுமில்லை..." என்றேன் நான். .." "நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்து விடுகிறேன். நேருஜியின் வீட்டில் ஒரு மீட்டிங்.. நீங்க நான் வந்தப்புறம் என்னுடனேயே சாப்பிடலாம்' என்ருர். .

அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த் சமயம் "அசோக் மேத்தாவுக்குத் தங்களைப் பார்க்க வேண்டுமாம். எப்போது சந்தித்துப் பேசலாம் என்று கேட்கிருர்?' என்ருர் தீனதயாள். . . . . . .

'பிரதம மந்திரி வீட்டுக்கு வருவார் இல்லையா?” "ஆமாம்.' * 。 . 'அங்கேயே பார்த்து விடுகிறேனே" என்று சொல்லிய படியே போய்க்காரில் ஏறிக் கொண்டார். அவர் திரும்பி வரும் போது மணி ஒன்றேகால்:

“என்ன... ஏதாவது விசேஷம் உண்டா? டெலிபோன் வந்ததா?... என்று வழக்கப்படி கேட்டுக் கொண்டே வந்தார்.

129

129