பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரே தமாஷும், வேடிக்கையுந்தான்!

சிற்சில தலைவர்களைப் பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதைப் பற்றியும் சொல்லி விட்டு, 'ஹோ ஹோ' என்று சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்குச் சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை. அந்தச் சிரிப்பிலே கேலி இருந்தது. 'ஐயோ. இவர்களெல்லாம் இப்படிக் கோழைகளாக இருக்கிறார்களே:' என்ற பரிதாபம் இருந்தது.

சிறிது நேரம் சிரித்து ஓய்ந்த பிறகு, "அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவங்களும் சரியில்லையேன்னேன், எந்தச் சமயத்தில் எதைப் பேசுவது. எதைப் பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலேயே? வாயை மூடிக்கிட்டுச் கம்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே !" என்று மீண்டும் சிரிக்கிறார்.

"ஜனசங்கம், சுதந்திரா இந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேரும் முயற்சிக்கு என்ன தடங்கல்?" என்று நான் கேட்டபோது, "நான் என்ன செய்யட்டும்? குஜராத்தும், மைசூரும் ஒத்துவர மாட்டேங்குதே! அவங்க ஊர்ப் பிரச்னை அவங்களுக்கு. அவசரப்பட்டாலும் சில காரியங்கன் கெட்டுப்போகுமே!

13