பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கை, திட்டம் எதுவாயிருந்தாலும் மாத்தறதிலே என்ன தப்புங்கிறேன்?' என்று கூறியபடியே எழுந்தார்.

பார்லிமெண்டரி போர்டு கூட்டத்துக்குப் போய் விட்டு இரவு ஏழேகால் மணிக்குத்தான் திரும்பி வந்தார். அப்போது தம்முடன் திரு. அசோக் மேத்தாவையும் காரில் அழைத்து வந் திருந்தார்.

“என்ன?' என்று கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்த திரு.காமராஜ், திரு. அசோக் மேத்தாவின் பக்கம் திரும்பி, 'கமான், வி ஷல் கோ அப்ஸ்டேர்ஸ்" என்ருர்.

இருவரும் மேலே போய் அரை மணி நேரம் பேசிக் கொண். டிருந்தார்கள். நானும், நண்பர்கள் சிலரும் கீழே பூந்தோட்டத் தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அந்த அரை மணி நேர மும் என் கவனம் முழுவதும் மேல் மாடியில் அவர்கள் இரு வரும் என்ன பேசுகிருர்கள் என்பதிலேயே இருந்தது.

திரு. காமராஜ் குரல்தான் ஓங்கியிருந்தது. அதுவும் அவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிருர் என்பது தெளிவாகத் தெரிந்தது. என்ன பேசுகிருர் என்கிற விஷய்ந்தான் புரிய வில்லை. கடைசியில் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். திரு. அசோக் மேத்தாகாரில் ஏறிச் சென்றதும் திரு. காமராஜ் தம்மு டைய வழக்கப்படி'என்.ன?' என்ருர். - -

அந்த 'என்.ன? என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை. பதிலே அவரும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு அலுவல் முடிந்து இன்னெரு அலுவலுக்குத் தயாராகும்போது அவர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி அது. . - அன்றிரவு திரு. டி.டி.கே. வீட்டில் அவருக்குச் சாப்பாடு. பத்தே நிமிடங்களில் குளித்து வேறு சட்டை ம்ாற்றிக் கொண்டு கிளம்பி விட்டார். போகும் போது ராஜா (திரு. ஜி. ராஜகோபாலன், எம்.பி.) நான் இன்றிரவு பத்து மணிக்குச் சாஸ்திரியைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏறி பாடு செய்!” என்ருர். : * : - ' ' ... . . . . . . .

இரவு ஒன்பதரை மணி இருக்கும். திரு.ராஜகோபாலன், . நடராஜன் முதலிய நண்பர்களுடன் தோட்டத்தில் உட்கார்ந்து

131

131