பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று ராஜு இருபத்து நாலாந் தேதி என்ன கிழமை?” என்று விசாரித்தார். -

'செவ்வாய்க்கிழமை" என்ருர் ராஜு. 'அன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு?” 'மூணு - நாலரை.' - - - - 'மெட்ராஸுக்கு டெலிபோன் போட்டுக் கூட்டத்தை மாலை ஆறு மணிக்குப் போடச் சொல்லி விடு.” (காங்கிரஸ் சட்ட சபைத் தலைமைப் பதவிக்காகக் கூட்டப்படும் கூட்டம் அது.)

"ஏன்? சாப்பிட்ட பிறகு ராகு காலமாயிருந்தால் பரவா யில்லை என்பார்கள்' என்ருர் ராஜு.

"இப்படி எல்லாவற்றுக்குமே ஒரு மாற்று வைத்திருப்பாங்க நம்மவங்க. அது கிடக்கட்டும்; கூட்டத்தை ஆறு மணிக்கே நடத்தி விடலாம். முன்னடி நாலு மணிக்கோ, ஐந்து மணிக்கோ கூட்டம் போட்டால் யாராவது ரெண்டு பேர் ராகுகாலம் என்பாங்க. அப்புறம் மாத்தனும், அப்படிச் சொல்றதுக்கும் இடம் வைக்காம முன்னடியே செய்துட்டா நல்லதில்லையா?"

காலையில் ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டுப் பத்திரி கைகளைப் படித்து முடித்ததும் அவரைத் தேடி வரும் பல தலைவர்களையும் சந்தித்துப் பேசினர். டி.டி.கே., லால்பகதூர் சாஸ்திரி, நேருஜி இம்மூவரையும் தவிர அநேகமாக எல்லோ ரும் இவரைத் தேடி வருகிருர்கள். இவர்களைச் சந்திப்பதைத் தவிர, லஞ்ச ஒழிப்புக் கமிட்டிக் கூட்டம், தேசியப் பாதுகாப் புக் கமிட்டிக் கூட்டம், பார்லிமெண்ட்ரி போர்ட் மீட்டிங் என்று தினமும் மூன்று. நாலு மீட்டிங்குகளுக்குப் போய் வந்தார்.

சென்னைக்குப் புறப்படும் முதல் நாள் இரவு. "காலயில் விமானத்துக்குப் புறப்பட வேண்டும். நீங்களும் என்னுடன் தானே வருகிறீர்கள்? என் பக்கத்திலே வீட் ரிசர்வ் செய்து, விட்டார்களா? விசாரித்தீர்களா?' என்று கேட்டார். . .

"ஆமாம்" என்றேன். ... . . . . . . . . . . . . .

சரி, பின்னேகாலையிலே புறப்படத் தயாராயிருங்க..."

காலையில், ஐந்தரைக்குள்ளாகவே விமானக் கூடம் போய்ச்

சேர்ந்தோம். . . . . . . . . . . . . . .

132

132