பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'விமானம் பழுது பார்க்கப்படுகிறது. ஆகையால் புறப்படு வதற்கு ஒன்றேகால் மணிநேரம் தாமதமாகும் என்று ஒலிபரப் பப்பட்டது.

அந்த ஒன்றேகால் மணி நேரத்தில், காலப் பத்திரிகைகள் எத்தனை உண்டோ அவ்வளவையும் படித்துத் தீர்த்தார். கடைசி யில்-விமானம் புறப்பட்டது.

அவரை என்னென்னவோ கேள்விகள் கேட்க வேண்டு மென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனல் ஒன்றுமே கேட் கத் தோன்றவில்லை. விமானத்தில் உட்கார்ந்ததும் ஏர்ஹோஸ்ட் டஸ் வந்து பஞ்சும், பெப்பர்மிண்ட்டும் கொடுத்து விட்டுப் போளுள். திரு. காமராஜ் பெப்பர்மிண்ட் ஒன்றை மட்டும் எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டார். உடனே பத்திரிகை படிக்கத் தொடங்கி விட்டார். நான் அவரையே கவனித்த வண்ணம் வாய் மூடி மெளனியாக உட்கார்ந்திருந் தேன். பத்திரிகைகளையெல்லாம் படித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். - . . . .

அவர் படித்து முடித்ததும் கண்களை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். அரை மணி நேரம் உறங்கியவர், சட் டென்று கண் விழித்துக் கொண்டு, "என்.ன?' என்ருர்.

“உங்கள் மனத்தில் 'காமராஜ் திட்டம்' எப்போது உதயமா யிற்று? எப்படி உதயமாயிற்று?" என்று கேட்டேன்.

'ரொம்ப நாளாகவே இதைப் பற்றி யோசித்துக் கொண். டிருந்தேன். காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் சர்க்காரையும், பத வியையுமே சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டார்கள். இவர் கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பியாக வேண்டும். அதற்கு என்னைப் போன்றவர்கள் பதவியிலிருந்து விலகி வெளியே வந் தால்தான் சர்க்காரிலும், பதவியிலும் உள்ள கவர்ச்சி குறையும். காங்கிரசில் புதிய திட்டங்கள் வகுக்க வேண்டும். முதலில் சென்னையில் நான் மட்டும் பதவியிலிருந்து விலகி மற்ற ராஜ் யங்களுக்கு வழிகாட்டலாமா என்று எண்ணினேன். பல பேரி டம் என் திட்டத்தைப் பற்றிக் கூறி ஆலோசித்தேன். டில்விக்குப் போயிருந்த போது நேருஜியிடமும் சொன்னேன். அதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அதைப் பற்றி சர்ச்சை செய்ய

133

133